நன்றிகள் பல

முயற்சிகள் முத்திரையானது இன்று..!

ஆம்..! எனதருமை நண்பர்களே..! மிகவும் சந்தோசமான நாள் இன்று. உங்களிடம் பகிர்வதில் இரட்டிப்பு சந்தோசம் எனக்கு.! திறமை வளர்ந்த இடமும் வாழ்த்தும் உள்ளமும் நீங்கள்தானே..! அதை மறுக்க இயலாது..! கனவொன்று நினைவானதின்று..! பாடவந்த நான் இன்று பாடலாசிரியராக அங்கீகாரம் பெற்றேனென்றால் என் எழுதும் திறமைக்கு வித்திட்டவர் பெருமை சேர்த்தவர் ஆனது உடன்பிறவா சகோதரர் திரு யானிதேஷ் அவர்களுக்கு எனது நன்றி..!

நான் எழுதிய பாடல்களில் (ராக்கிங் ஜாக் என்ற பெயரில் ) ஒன்று இன்று வெளியாகிவிட்டது. ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் நடிகர் திரு. ஜெய் ஆகாஷ் கதை திரைகதை எழுதி, நண்பர் திரு UK முரளி அவர்கள் இன்னிசையில், திரு என். ராத அவர்கள் இயக்கத்தில் உருவான படம் “நான் யார்”. இந்த படத்தின் வெள்ளோட்டம் மற்றும் இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள எம்.எம் தியேட்டரில் நடைபெற்றது. அதில் நானும் விருந்தினராக கலந்து பங்களித்தது பெருமகிழ்ச்சியாக உள்ளது. நிறையபாடல்கள் எழுதியிருந்தும் அதில் முதலாக வெளிவருவதில் யாராக இருந்தாலும் ஒரு சந்தோசம்தானே.!

இந்த வாய்ப்பினை கொடுத்த இறைவனுக்கும், வளர்ந்து வரும் இசையமைப்பாளர் என்னை அறிமுகம் செய்தவர் அன்புள்ளம் கொண்ட எனதருமை சகோதரர். UK முரளி அவர்களுக்கும், திரு. ஜெய் ஆகாஷ் அவர்களுக்கும் எனக்குள் இருக்கும் திறமைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் எனதருமை நேரிடை மற்றும் இணையதள நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (28-Feb-15, 4:25 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
Tanglish : nanRikaL pala
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே