எல்லோரும் வெண்பா எழுதலாம்

எல்லோரும் வெண்பா எழுதலாம் . எப்படி ?
தொடர்ந்து படியுங்கள் .

எழுத்து சொல் அசை சீர் தளை தொடை --இது பொதுவான இலக்கண அடிப்படை
எழுத்தால் ஆவது சொல் ; சொல்லைப் பிரித்தால் அசை ; அசை சேர்த்தல் அல்லது கட்டுதல் தளை வெட்டிடும் என்பது சொல் ; இதை அசையாகப் பிரிப்போம்
வெட்/ டிடும் ----நேர் நிரை ---இது ஈரசை கூவிளம் . எப்படி ?
அதற்கு அசை வாய்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளுவோம்
வாய்ப்பாடு -----இங்கு வெண்பாவுக்குரிய வாய்பாடு மட்டும் தருகிறேன்
நேர் நேர் -- தேமா
நிரை நேர் --புளிமா
நேர் நிரை --கூவிளம்
நிரை நிரை ---கருவிளம்
---இவை ஈரசை வாய்பாடு
நேர் நேர் நேர் ---தேமாங்காய்
நிரை நேர் நேர் ---புளிமாங்காய்
நேர் நிரை நேர் --- கூவிளங்காய்
நிரை நிரை நேர் ---கருவிளங்காய்
----ஈரசைச் சீரில் நிரை வர கனிச்சீராகும். நேர் நேர் நிரை --தேமாங்கனி
வெண்பாவில் கனிச்சீர் வரக் கூடாது
மா முன் நிரை விளம்முன் நேர் வரும் இயற்ச்சீர் வெண்டளையும்
காய் முன் நேர் வரும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரிய தளைகள்.ஓசை செப்பலோசை ---இயல்பாகச் சொல்வது போன்ற ஓசை
அசை என்பது ....
தனிக் குறில் தனி நெடி குறிலோ நெடி லோ ஒற்றுடன் வருவது நேர்
எ . கா : க கல் நீ தேன் ந நான் ம மான்
இரு குறில் குறில் நெடில் ஒற்றெடுத்தும் வருவது நிரை
எ. கா : சுவை துணி , குணா
அடி என்பது : நன்கு சீர்கள் கொண்ட அடியும் ஈற்றடி மூன்று சீர்கள்
கொண்டே அமையவேண்டும்
கடைசி அடியில் ஈற்றுச் சீர் ஓர் அசை கொண்ட சீராகவே அமைய வேண்டும்
அது நாள் மலர் காசு பிறப்பு என்பது போல் அமைய வேண்டும்
நாள் ---நெடில் ஒற்று ---நேர்
மலர் ---இருகுறில் ஒற்று ---நிரை
காசு --நேர் ---சு குற்றியலுகரம் மாத்திரை குறைவாய் ஒலிப்பதால் முழு
அசை ஆகாது இதை நேர்பு என்பர்
பிறப்பு ---இரு குறில் ஒற்று ---நிரை . பு வுக்கு மேற் சொன்ன விதி

இந்த பாவை ஆராய்வோம்

கல்லை வடித்தால் எழில்சிலை ஆகலாம் --------------------1
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நிரை
தேமா புளிமா கருவிளம் கூவிளம்

சொல்லை வடித்தால் கவின்கவி ஆகலாம் --------------------2
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நிரை
தேமா புளிமா கருவிளம் கூவிளம்

பொன்னை அணிசெய்யின் தங்கநகை ஆகலாம் ----------------------3
நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை
தேமா புளிமாங்காய் கூவிளம் கூவிளம்

புன்னகையோ முத்து நகை ----------------------------------------------------4
நேர் நிரை நேர் நேர் நேர் நிரை (மலர் போல் )
கூவிளங்காய் தேமா
எல்லா அடிகளும் மாமுன் நிரை விளம் முன் நேர் கொண்ட இயற்ச்சீர்
வெண்டளையும் காய் முன் நேர் வரும் வெண்சீர் வெண்டளையும் பெற்று
ஈற்றடி முச்சீருடனும் ஈற்றுச் சீர் ஓரசைச் சீரும் பெற்று
வெண்பா விதிப்படி தளை தட்டாமல் அமைந்திருக்கிறது .

கல் சொல் ---ல் எதுகை பொன் புன் ---ன் எதுகை
ஆகையால் நாலு அளவடி கொண்ட இரு விகற்ப இன்னிசை வெண்பா
தனிச் சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா
முயலலாம் எழுதலாம் மகிழலாம் வெண்பா சோலை அமைக்கலாம்
வாழ்த்துக்கள்
-----அன்புடன், வெண்பா நாடன் கவின் சாரலன் .

எழுதியவர் : கவின் சாரலன் (28-Feb-15, 5:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 186

சிறந்த கட்டுரைகள்

மேலே