2015 மத்திய பட்ஜெட் சில நல்ல அம்சங்கள்

மத்திய அரசு நிதி நிலை அறிக்கை பாதகங்கள் சில இருக்கின்றன ;பலர் அலசிவிட்டார்கள் ;சில நல்ல அம்சங்கள் மட்டும்இங்கே தரப்படுகின்றன
1தனி நபர் வருமானத்தில் ரூ.4,44,200 வரை வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
2.சிறுதொழில் கடன் வழங்கு வதற்காக நாடு முழுவதும் முத்ரா வங்கிகள் தொடங்கப்படும். இந்த வங்கிச் சேவைக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது
3.வெளிநாடுகளில் உள்ள சொத் துகள், வருமானத்தை மறைத்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
4.உள்நாட்டில் கருப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் இயற்றப்படும். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயமாக்கப் படுகிறது.
5.தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங் கப்படும்.
6நிலையான வட்டியுடன் தங்கத்தை அடிப்படை யாக கொண்டு பத்திரங்களை அரசு வெளியிடும். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக அரசு வெளியிடும் பத்திரங்களாக வாங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது மட்டுமல்லாது மக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வட்டி பெறுவதுபோல தங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெற முடியும். தங்க நகைக் கடை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடைய முடியும்.

இப்போதுள்ள தங்க டெபாசிட் திட்டம், தங்க கடன் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக இது செயல்படுத்தப்படும். வங்கி களும், பிற நிதி நிறுவனங்களும் தாங்கள் பெறும் தங்கத்தை பணமாக்கிக் கொள்ள முடியும்.

எழுதியவர் : (1-Mar-15, 11:39 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 155

சிறந்த கட்டுரைகள்

மேலே