நினைவலைகள் - ப்ரியன்

||ஆங்கில வார்த்தை உபயோகத்தை பொறுத்தருள்க.
அலுவலகத்தில் என் இடம் மாற்றியதால் எழுதியது||

அதிகாலை எட்டிற்க்கெழுந்து
அவசரமாய் குளித்துக்கிளம்ப; இங்கு
அடிஸ்னலாய் ரெண்டு ஹவரு
அனாமத்தா நீ முடிச்சிருப்ப !

பத்தோ பதினொன்னோ
பரபரப்பா நான் வந்தா; தினம்
பிடியெஸ் டிராஃப்ட்டில்ல
புராஜக்ட்டிரைவ் வரலேனு
ஃபிரியாத்தான் நீயிருப்ப !

காலையில சாப்பிடாட்டி
கேக்கு பிஸ்கட்டு; இல்ல
கேக்காம நீ கொடுத்திடுவ
கொரியன் சாக்லேட்டு !

நாலும் அறிந்திடாத நீ
நம்ம ஊருபுள்ள; கொலிக்-ஐ
அண்ணன் அக்கா மாமானு
அழைச்சே கொன்னுடுவ !

தூக்கம் மதியம் வரும்போது
தொடங்கிடுவ பேச்ச; சும்மா
நல்லா இருக்கியானு
நாலுமுறை கேட்டுவிடுவ !

சினாக்ஸிருந்தா கொடுன்னு
சீரியஸா கேட்டுசாப்பிட்டு; இது
காசுபோட்டு வாங்கியதானு
கவலையில்லாம கலாய்ப்ப !

தொல்லையின்னு நினைச்சு
தூரமாயெங்க போனாலும்; நீ
வம்பிழுத்து து(இ)ன்பம்தருவ
வச்ச கண்ணு வாங்காம !

ஊருக்குள்ள வைத்தியருங்க
ஓராயிரம் இருந்தாலும்; பையனுக்கு
உங்களைப்போல் உதவலையே
உறுப்படாத என் டவுட்டதீக்க !

பைந்தமிழ் பெயர்தேட எழுத்தில்
பரிட்சயமும் ஆகிபுட்டேன்; கொஞ்சம்
தப்பும்தவறா நான் புரிந்த
தமிழிலேயும் தேரிபுட்டேன் !

இருக்கறது தெரியாம ஆபிஸ்ல
இருந்தேன் சந்தோஷமா; அதை
யாரோ கண்ணுவச்சி எவரோ வயிறெரிஞ்சி
எழுப்பிட்டாங்க இடத்தவிட்டு என்பாவி மக்கா !

படம் : நன்றி_ விமல்சந்ரன்.

எழுதியவர் : ப்ரியன் (3-Mar-15, 3:12 pm)
பார்வை : 282

மேலே