டூ விட்டுப் போகுதே

பாத்தாலே குத்துதே
குளத்தோர கருவேல
காத்தாட நடந்தாலும்
தீவாட மூக்கோட
டூ விட்டு போகுதே
சந்தோசம் என் கூட
தூக்கிட்டு போயிட்டா
சிரிப்பெல்லாம் சொல்லால.

மலை போல நிக்குதே
நேரங்கள் என் நாளில்
அகராதி காட்டுதே
சோகம் என என் பேரில்
மண்வாசம் இல்லாத
சாரல் ஏன் என் ஊரில்
தாமரக் கூட ஏன்
முள்ளோடு இந்த சேற்றில்?..

துக்கம் விசாரிக்கும்
என் சன்னல் வரும் தென்றல்.
சோடிப் புறா செய்யும்
எனைப் பார்த்து தினம் நக்கல்.
நினைவோடு மனம் செய்யும்
முங்கியே தினம் நீச்சல்
யாரேனும் கேட்பாரோ
செவிக் கீறும் நூறு கூச்சல்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (6-Mar-15, 9:15 am)
Tanglish : do vittup poguthe
பார்வை : 239

மேலே