தபால் காரர்

எலோருக்கும் வணக்கம் !
நலம் தானே !

நான் உங்கள் வளையத்திற்கு
ஒரு செய்தி கொண்டு வந்து உள்ளேன் !

செய்தியை சேர்ப்பது தான்
என் தொழில் !
அதனால் உரிமை எடுத்து
உங்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி !

வாழ்க்கை
நான் எடுத்து செல்கின்ற
தபால் போன்றதுங்க !

நல்ல செய்தியும் இருக்கும்!
கெட்ட செய்தியும் இருக்கும்!

இரண்டையும் ஒரே
மன நிலையில்
தான் சேர்ப்பேன் !

என் கடமை
உரிய நேரத்தில்
உரியவரிடம் சேர்ப்பது தான் !

அது போல்
உங்க கடமையை
உரிய நேரத்தில்
உரியவருக்காக
செய்துடுங்க !

என்னை உதாரணமாய்
உள்ளத்தில் வைங்க !

எளிமையான
வாழ்க்கை !

உழைப்பதால்
வளமான
வலிமையான
வாழ்க்கை !

தபால் கனமா
இருந்தாலும்
கலங்க மாட்டேன்
கனம் குறைவாய் இருந்தாலும்
கண்டுக்க மாட்டேன் !

எல்லாவற்றையும்
தள்ளி தான் நான்
பார்ப்பேன் !நிற்பேன் !

பணம் ஒரு
மனிதனை
செல்வந்தர்
ஆக்காதுங்க !

தலை குனியாமல்
தன்னம்பிக்கையுடன்
நடை போடுவதால்
நான் எப்போதும் செல்வந்தர் தாங்க !

வருமானம்
வரவு செலவிற்கு
பத்தாதுங்க !

வருமானம்
வரும் போகும்
ஆனால்
வாழ்க்கை ஒரு முறை தான்!
அதனாலே
வாழ்ந்துடனும்ங்க !

சேவை செய்து
தேவையை எடுத்து கொள்றேங்க !

முடிவா ஒன்னுங்க !
சிரிக்கும் போது
வாழ்க்கையை ரசிக்க முடியும் !

அழும் போது
வாழ்க்கையை
புரிந்து கொள்ள முடியும்!

தபாலை
பிரித்து
படிச்சுடீங்களா

படிச்சுட்டு
அடுத்த வேலையை பாருங்க !
============================கிருபா கணேஷ் ======================================================

எழுதியவர் : kirupaganesh (6-Mar-15, 11:24 pm)
Tanglish : thabal kaarar
பார்வை : 303

மேலே