தமிழில் பிழையின்றி எழுதிட 04 - திரு அகன்

தோழர்களே....
அண்மையில் இறக்கம் இரக்கம் குறித்து சில தவிப்புகள், சர்ச்சைகள் தளத்தில் கண்டேன்...மயங்கொலிச் சொற்கள் உண்டாக்கும் கோளாறுகள் பலருக்கும் தெரிந்தால் இச்சிக்கல் குறையும்.எனவே பட்டியல் தொடர்கின்றேன்...

தோழர் தம்புவுக்கு நன்றிகள்.

.
உலவு ­ =நட
உளவு ­ =ஒற்று

உழவு ­ =கலப்பையால் உழுதல்
உழி ­ = இடம், பொழுது

உழு ­ = நிலத்தை உழு
உளி ­ = தச்சுச் கருவிகளுள் ஒன்று

உலு ­ = தானியப் பதர்
உளு ­ =உளுத்துப் போடுதல்

உளை ­= பிடரி மயிர், தலை, சேறு
உலை ­= கொல்லன் உலை, நீருலை

உழை ­ =பாடுபடு, பக்கம், கலைமான்

உழுவை ­ =புலி
உளுவை ­ =மீன் வகை

எல் ­ =கல், மாலை, சூரியன்
எள் ­ =எண்ணெய் வித்து, நிந்தை

எலு ­ =கரடி
எழு ­ =எழுந்திரு, தூண்

ஒளி ­ =வெளிச்சம், மறை(த்துவை)
ஒலி ­ =சப்தம், நாதம், காற்று
ஒழி ­ =அழி, தவிர், கொல், துற

ஒல் ­ =ஒலிக்குறிப்பு
ஒள் ­ =அழகு, உண்மை, அறிவு, ஒளி

களங்கம் ­= குற்றம், அழுக்கு
கலகம்= ­ போர், அமளி, இரைச்சல்
கழகம் ­ =சங்கம், கூட்டமைப்பு
கழங்கம்= ­ கழங்கு, விளையாட்டுக் கருவி

களி ­ =மகிழ்வு, இன்பம்
கலி ­ =கலியுகம், பாவகை, சனி
கழி ­ =கோல், மிகுதி, உப்பளம்

களை ­ =அழகு, புல், பூண்டு, அயர்வு
கலை= ­ ஆண்மான், சந்திரன், கல்வி
கழை ­ =மூங்கில், கரும்பு, புனர்பூசம்

கல் ­= மலை, பாறை, சிறுகல்
கள் ­ =மது, தேன்

கலம்= ­ கப்பல், பாத்திரம்
களம் ­= இடம், போர்க்களம், இருள்

காலி ­ =ஒன்றுமில்லாத்து, வெற்றிடம்
காளி ­ =துர்க்கை, மாயை

காழி ­ =சீர்காழி (ஊர்)
காலை= ­ பொழுது, விடியற்பொழுது
காளை ­= காளைமாடு, இளைஞன்

காலம் ­ =பொழுது, நேரம்
காளம் ­ =எட்டிமரம், சூலம்

கிளி ­ =பறவை, வெட்டுக்கிளி
கிலி ­ =அச்சம், பயம்

கிழி ­ =கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிழவி= ­ முதியவள், மூதாட்டி
கிளவி ­= சொல், மொழி

சலம் ­ =நீர், சிறுநீர், குளிர்
சளம் ­ =பொய், துன்பம், வஞ்சனை

சாலை= ­ பாடசாலை, பொது மண்டபம்,
அறக்கூடம்
சாளை ­ =கடல்மீன்

சாழை ­ =குடிசை, குச்சு

கழித்தல்= ­ சுழலுதல், நீர்ச்சுழல்
களித்தல் ­= முறித்தல், சினத்தல்

சூலை ­= வயிற்று நோய்
சூளை ­ =செங்கல் சூளை

சூள் ­ ==சபதம்
சூல் ­ ==கர்ப்பம்
சூழ் ­ ==சூழ்ந்துகொள், சுற்று

சேல் ­= மீன்
சேள் ­ =மேலிடம்

சோளி ­ =கூடைவகை
சோலி= ­ ரவிக்கை, காரியம்
சோழி ­ =பலகரை

தவளை= ­ ஓர் உயிரி
தவலை ­= பாத்திரம்

தளம் ­ =மேடை, மாடி வீட்டின் அடுக்கு
தலம் ­ =இடம், பூமி
தழம் ­ =தைலம்

தழை ­ =தாவர உறுப்பு

தலை ­ =மண்டை
தளை ­ =விலங்கு

தாலம் ­ =உலகம், தேன்
தாளம் ­ =இசைக்கருவி, ஜதி

தாளி ­ =தாளித்தல், பனை
தாலி ­ =மங்கல நாண்
தாழி ­ =கடல், குடம், பரணி பெரியபாண்டம்

தாள் ­ =முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்
தால் ­ =நாக்கு, தாலாட்டு
தாழ் ­ =தாழ்தல், குனிதல்

வாசியுங்கள்...பயன்படுத்துங்கள் படைப்புகளில்
-------- படைப்பு அளித்தவர்: திரு அகன்
====================================================
பின் குறிப்பு: இது திரு agan அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு /kavithai / 236648 -ல் கருத்திடவும்.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : திரு அகன் (10-Mar-15, 12:41 pm)
பார்வை : 324

மேலே