தமிழில் பிழையின்றி எழுதிட 05 - திரு அகன்

இலக்கணம்
தோழர்களே....பிழை இன்றி எழுதிட எழுத்துகளின் வேறுபாடுகள் பிரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 11 பகுதிகள் அளித்திருந்தேன்..இப்போது அடுத்த பகுதி...

துலக்கம் ­= ஒளி, தெளிவு
துளக்கம் ­= அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி

துலம்= ­ கோரை, கனம்
துளம் =­ மாதுளை, மயிலிறகு

துலி= ­ பெண் ஆமை
துளி ­ =மழைத்துளி, திவலை, சிறிய அளவு

துழி =­ பள்ளம்

துலை= ­ ஒப்பு, கனம்
துளை ­ =துவாரம், வாயில்

தூலி ­ =எழுதுகோல், எழுத்தாணி
தூளி =­ புழுதி, குதிரை

தெழித்தல் ­= கோபித்தல், முழங்குதல், அதட்டுதல்,
நீக்குதல், ஆரவாரித்தல்

தெல் ­ =அஞ்சுதல்
தெள் ­= தெளிவான

தோலன் ­ =அற்பன்
தோழன் ­= நண்பன்

தோளி ­ =அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
தோலி ­ =பிசின், ஒருவகை மீன்
தோழி ­= பாங்கி, நட்பால் நெருக்கமானவள்

தோல் ­ =சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
தோள் ­= புயம், வீரம்

நலன் ­ =நலம், அழகு, புகழ், இன்பம், நம்மை, குணம்
நளன் ­= தமயந்தியின் கணவன், ஓர் அரசன்

நலி ­= நோய்
நளி ­= குளிர்ச்சி, பெருமை

நலிதல் ­ =நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் ­= செறித்தல், பரத்தல், ஒத்தல்

நல் ­ =நல்ல
நள் =­ இரவு, நடு, நள்ளிரவு

நாளம் ­ =பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாலம் ­= பூவின் காம்பு
நாழம்= ­ இழிவுரை, வசவு

நாளி ­ =கல், நாய்
நாலி ­ =முத்து, கந்தை ஆடை
நாழி ­ =உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர்,
அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி

நாலிகை ­ =மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை ­ =வட்டம், கடிகாரம்

நால் ­= நான்கு
நாள் ­= காலம், திதி

நாழ் ­ =குற்றம், செருக்கு

நீலம் ­ =ஒரு நிறம், கருங்குவளை, இருள்
நீளம் ­= நெடுமை (நீண்ட), தாமதம்

நீல் ­= நீலம், காற்று
நீள்= ­ நீளம், ஒளி

சோலி=வேலை
சோளி,=ரவிக்கை (இந்தி சொல் )
சோழி =விளையாடும் பொருள்
கோலி, =விளையாடும் பொருள்
கோளி,=
கோழி =பறவை
போலி, =நகல்
போளி =இனிப்பு
வாலி, =குரங்கு (கவிஞர் )
வாளி, =கொள்கலன் (=நீர் பாத்திரம் )
தாலி, =மண வாழ்வின் அடையாளம்
தாளி, =படையல்
தாழி =கொள்கலன்

வாசியுங்கள் ...பயன்படுத்துங்கள்...

-------- படைப்பு அளித்தவர்: திரு அகன்
====================================================
பின் குறிப்பு: இது திரு agan அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு /kavithai / 236653 -ல் கருத்திடவும்.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : திரு அகன் (10-Mar-15, 12:48 pm)
பார்வை : 467

மேலே