கெப்ரியஸ் கதவு‬ -1

முன்னிரவு நேரம்...

காவலாளியின் கொட்டாவி சத்தமும் புகையிலை வாசமும் தெற்குப் பக்கமிருந்து வந்தது.
இதுதான் சரியான நேரம் தற்காப்பு வேலியின் வெளிப்பகுதியை நெம்பி சுற்றுச்சுவரின் அருகில் இருந்த சிதைந்து போன பூனைத் தலை மம்மியின் சிலைமீது கால் வைத்து மெதுவாக உள்ளே குதித்தான்.சில நொடிகள் அசையாமல் நின்று சுற்றுமுற்றும் விழிகளை ஓட்டி மெல்ல பாதங்களை நகர்த்தினான்.

சில அடிகள் நடந்ததும் அந்த பிரமிடின் ஏதோ ஒரு திசையின் மூலையை அடைந்தான். மனதுக்குள் ஏதோ என்னியவன்
கரெக்ட் ஒன்னு ரெண்டு மூனு... எட்டு .
சுவற்றில் கைவத்து எதையோ தேடினான் கிடைத்துவிட்டது போல அந்த கும்மிருட்டிலும் புன்னகை பளிச்சென்று தெரிந்தது . ஒரு குட்டி சிலை அவன் கையில் வந்தது செல்பேசியை எடுத்தான்

''டாக்டர் சாவி கெடைச்சுறுச்சு
இம்
ஆமா அதேதான் முக்காலடி
இம்
ஓகே
நாளைக்கு சாயந்தரம் உங்க கையில இருக்கும்.”
செல்போனை அணைத்தவாறு

" இந்தாளு இந்தசச் சிலையை எடுக்கவா ரெண்டு கோடி கொடுத்தான் "

திரும்பி நடக்க ஆரம்பித்தவன் கல் தடுக்கி கீழே விழ வெளியே இருந்த காவலாளி விசிலடித்தான்.
தட தடவென இருபது பேர் உள்ளே ஓடிவரும் சத்தம் கேட்டது.பிரமிடை நோக்கி ஓட ஆரம்பித்தான் வாசல் அருகே வந்ததும்தான் தெரிந்தது பிரமிடின் வாசல் கதவு அடைக்கப்பட்டிருப்பது.

சத்தம் அருகே கேட்டடது ஏற்கனவே இதை திருடவந்து காவலர்கள் கையால் மடிந்து போன காதிர் மனக்கண்ணில் வந்து போனான். கூடாது நான் சாகக்கூடாது ஏதாவது செய் என்று மனம் பிராண்டியது.
பிரமிடின் ஒரு மூலைக்கும் சுற்றுச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகுந்த சிரமபட்டு உள்நுழைந்தான். முழங்காலில் பிரமிட்டின் கருங்கல் சுவர் அழுத்தி ரத்தம் கசிந்திருக்கக்கூடும் எரிச்சலாக இருக்கிறது. இன்னும் சில அடிகள் நகர்ந்தான்.

ஏதோ ஒரு கல்லின் மீது கால் வைக்க அந்தக் கல் உள்ளே நழுவியது.
சடாரென்று பக்கவாட்டு சுவர் ஒன்று உள் வாங்கியது.
அப்படியே சரிந்து குப்புற விழுந்து கொண்டிருந்தான்
ஆ!
ஆ ஆ!
ஆஆஆஅ!


... தொடரும்

எழுதியவர் : எஸ் கே மகேஸ்வரன் (25-Mar-15, 12:12 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 725

மேலே