விசாரணையும் தீர்ப்பும்

ஒரு படத்தில் நடிகர் விஜய் சொல்வார்.

"தப்பு ஒண்ணா இருக்கும்போது தீர்ப்பு ஏன் ரெண்டா இருக்கு? கீழ் கோர்ட்ல தப்புன்னு சொன்னது எப்படி மேல் கோர்ட்ல தப்பு இல்லன்னு சொல்ல முடியும்" அப்படின்னு பேசுவார்.

இது சினிமா வசனம் மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனும் யோசிக்க வேண்டிய விஷயம். கள்ள கடத்தல். கொலை. கற்பழிப்பு. ஏமாற்றுதல். ஊழல். லஞ்சம். என்று எத்தனையோ தவறுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்களை போலீசார் பிடிப்பதும். அவர்கள் மீது வழக்கு போடுவதும். ஜெயிலுக்கு அனுப்புவதும். அவர்கள் ஜாமீனில் வருவதும். அவர்களுடன் எந்த போலீஸ் பிடித்ததோ அந்த போலிஸ் காரரே கைகோர்த்து நடப்பதும் அன்றாடம் நடக்கும் செலயலாகி போய் உள்ளது.

ஆனால் வழக்கு மட்டும் முடியாமல் வாய்தா மூலம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அப்படியும் இல்லாமல் வழக்கு நடந்து. நீதிபதி தீர்ப்பு சொல்லிய பிறகும் அவர்கள் அப்பீல் என்ற போர்வையை எடுத்து தன்னையும். சட்டத்தையும் சேர்த்து போர்த்திக்கொண்டு சுகமான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்பீல் என்பது எதற்கு?

மேல் கோர்ட். கீழ் கோர்ட் என்பதெல்லாம் எதற்கு?

ஒரு நிரபராதி அநியாயமாக குற்றவாளியாக கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அமைக்க பட்டதாகும். ஆனால் அந்த எண்ணத்தை ஒரு ஓட்டையாக வைத்துக்கொண்டு எத்தனை குற்றவாளிகள் தப்பித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.

பல பண முதலைகளுக்கு பதுங்கு குழியாகதான் இந்த அப்பீல் உள்ளது.

பல நிரபராதிகளும். காலம் கடந்தும் வெளிய வருவதுக்கு கூட வக்கிலாமல் உள்ளேயே கிடக்கும் சிறு சிறு குற்றவாளிகளும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கும்போது தெரிந்து தப்பு செய்து, தெரிந்து தப்பித்து கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இந்த அப்பீல் உள்ளது.

பல ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒருவருக்கு நீதிபதி பதவி கொடுக்க படுகிறது என்பதுதான் உண்மை. அது கீழ் கோர்ட்டாக இருந்தாலும் சரி மேல் கோர்ட்டாக இருந்தாலும் சரி. நீதிபதிக்கான தேர்வு இப்படித்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு நீதிபதி கீழ் கோர்ட்டில் இருந்து சொன்னார் என்பதற்காக அது தப்பான தீர்ப்பு ஆகி விடுமா? அப்படி ஒரு தப்பான தீர்ப்பு கொடுக்க அவரால் எப்படி முடியும்? இது மேல் கோர்டுக்கு போனால் தப்பு என்று சொல்வார்களே என்பது அந்த நீதிபதிக்கு தெரியாதா? அப்படி இருக்கும்போது எப்படி அப்படி ஒரு தீர்ப்பை அவரால் கொடுக்க முடியும்?

பல ஆண்டுகள் விசாரித்து, பல கோப்புகளை சரிபார்த்து. பல கேள்விகளை குற்றவாளிகளிடமும். சாட்சி காரர்களிடமும் கேட்டு தெரிந்து கொண்டு. வழக்கு தொடுத்தவரிடம் அதற்கான காரணங்களை கேட்டு அதை பதிவு செய்து. மீண்டும் மீண்டும் படித்து. இறுதியல் சொல்லும் ஒரு தீர்ப்பு எப்படி தப்பான தீர்ப்பாக முடியும்? அதை எதிர்த்து எப்படி அப்பீல் செய்ய முடியும்?

இங்கு வக்கீல்களின் vaarththai ஜாலமும். குற்றவாளிகளின் பண பந்துக்களும் விளையாடி, ஒரு மிக பெரிய தப்பை. தப்பே இல்லை என்று சொல்ல வைக்கும்.

தற்போது நிறைய குற்றவாளிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வக்கீல்களை மட்டும் நம்புவதில்லை. அப்பீல்களையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை ஒரே ஒரு வழியில் தான் மாற்ற முடியும்.

அதாவது.

தீர்ப்பு என்பது கீழ் கோர்ட்டில் மட்டுமே இருக்க வேண்டும். அந்த தீர்ப்புக்கு முன்னர் எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் அப்பீல் செய்து தங்கள் தரப்பு நியாயங்களை சொல்லட்டும்.

தீர்ப்பு தங்களுக்கு இந்த காரணத்தால் பாதகமாக வரும். எனவே தாங்கள் தலையிட்டு எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று சொல்லட்டும்.

அதன் உண்மை தன்மையை உயர் நீதிமன்ற. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பார்த்து. கீழ் கோர்ட் நீதிபதிக்கு அறிவுரை சொல்லட்டும். கீழ் கோர்ட் நீதிபதியும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளட்டும்.

இறுதியாக வழங்கப்படும் தீர்ப்பு ஒரே தீர்ப்பாக இருக்க வேண்டும். தீர்ப்பை மாற்றும் உரிமை யாருக்கும் இருக்க கூடாது என்ற நிலை எப்போது வருமோ அப்போதுதான் நீதிமன்றங்களும். தீர்ப்பும் உண்மையானதாக இருக்கும்.

எழுதியவர் : sujatha (28-Mar-15, 2:43 pm)
சேர்த்தது : கலைமணி
பார்வை : 124

மேலே