கட்டுங்க ராசா அணையத்தான் -சந்தோஷ்

கட்டுங்கடா கட்டுங்கடா
அணையதான் கட்டுங்கடா
மேகதாது அணையதான்
கட்டுங்கடா கன்னடத்தோழர்களே.!

அணையக்கட்ட சிமெண்ட்டு வேணுமா?
கூலிக்கு ஆட்கள் வேணுமா?
குழித்தோண்ட எந்திரம்தான் வேணுமா?


எல்லாமே இளிச்சவாய தமிழுனங்க
நாங்க வாரி எடுத்து தாரோம்...!
இங்க நாங்க மசிரக்கூட ஆட்டமாட்டோம்.
எந்த எதிர்ப்புக்கூட காட்டமாட்டோம்.

உங்களப்போல நாங்க இன்னும்
சூடுசொரணை உப்பு திங்கல போல..

உங்களப்போல நாங்க இன்னும்
வெட்கமானம் காப்பத்த தெரியல போங்க..


அங்கிருக்கிற நடிகனுங்க போல
இங்கிருக்கிற நடிகனுங்களுக்கு
தன்மான உணர்ச்சிதான் இல்ல ஆமாங்க.

இவனுங்களுக்கு பாலூற்றி விசிலடிச்சி
சோறுப்போட்ட எங்க உழவசனத்துக்கு
இன்னும் வேணும் இதுக்குமேலயும் வேணும்.

கம்யூட்டர்ல உக்கார்ந்து கடலைபோடும்
எங்க மாநிலத்து இளசுகளுக்கு
நெல்லுன்னா என்னான்னு தெரியாதுங்க
அட நம்புங்க... நம்புங்க தோழர்களே
இவிங்களுக்கு வாட்ஸ் அப்லாதான்
நாளை சோறு வரும் இட்லி வேகும்
செரிச்ச சோத்த பேண்டுவிட்டு துடைக்க
இனி சொட்டுத் தண்ணி வேணாம்
ஒரு முழும் பேப்பரு போதுமங்க..

நீங்க கட்டுங்க மைசூர் ராஜா...!
அணையத்தானே கட்டுறீங்க ....
அட கட்டிட்டு போங்க தோழா...!
விக்கி விக்கி நாங்க செத்தாக்கூட
எந்த இந்திய மவராசனும்
தண்ணி ஊத்த வரமாட்டான்...
ஏன்னு.. தெரியுமுங்களா கர்நாடக மனுசா ?

நாங்க இந்திய நாட்டுல இல்லைங்க
நாங்க தமிழ் நாட்டுல இருக்கோமுங்க.....!

நதியைத்தான் பங்கீட சொன்னாரு அப்துல்கலாமு
நாங்க நாட்டைத்தான் பங்கீடு கேட்போமுங்க மாமு...!

சஞ்சீவி மலையை தூக்கின அனுமாரு
தமிழ்நாட்டு தூக்கிட்டு போவாரு.........
அமெரிக்க பக்கத்துல வைப்பாரு,....



இப்படித்தானுங்க நாங்க கனவுல இருக்கோமுங்க

நீங்க கட்டுங்க மவராசா..
அணையத்தான் கட்டுங்க பதுசா.. !

கட்டுமானத்துல கலவைக்கலக்க ஏதும்
மின்சாரம் வேணுமுங்களா ?
இதோ அனுப்பி வைக்கிறோமுங்க.

இந்திய இறையாண்மைன்னா என்னாங்க ?
அட அதுவொரு மயிராண்மை டா மடையா... !!!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (28-Mar-15, 8:14 pm)
பார்வை : 147

மேலே