பஞ்சைப் பறையன் பாரதி-2

குருட்டு சாமியாரோ?
--------------------------------------------

பாரதி தம் தாய் தமிழுக்கு முகநூலாய் பாவித்து கொண்ட சக்தி எத்தகையவள்?

அவன் தன் கவியில் பிரயோகித்த அவள்.. எதற்க்கு பாத்திரமானவள்?

நித்தம் உனை வேண்டி நினைப்பதெல்லாம் நீயாய்...
பித்தனை போல் வாழ்வதிலே பெருமை உண்டாம் ...
என்று எவளை நினைந்து குமுறுகின்றான்?

எவ் சக்தியை மழைக்கு குடையாய் பிரயோகித்தான்?

எவ் சக்தியை தன் விரலுக்கு வீணையாக்கி கொண்டான்?

ஏன் அவளை காரணமின்றி ஊரெல்லாம் பிரசுரித்தான்?

சக்தி என்போளுக்கு பல்லக்கு தூக்கி வாழ்வேற்ற நினைந்திருப்பானோ?
அதற்கும் வழி இல்லை,
இவன் ரோசக்காரன்
பிறகு எப்படி?

ஒரு வேளை இவன் குருட்டு சாமியாரோ?
நாத்தீகம் பேசுவோர் இவனை ஏசல் செய்யலாமோ?

இல்லை,இல்லை.

புரிதல் வந்தது...
இவனின் வீரமாண்பிற்க்கு...
அவளே வித்து..

அவள் ஓர் உணர்வு பொருள்...
அவனால் மட்டுமே உணரமுடிந்த உயர் பொருள்...

அவ் உணர்வை கொண்டு அகிலத்தை வார்த்தையால் கட்டி இழுத்தான்.
வானம் வசபட்டது..

எதனையும் அவளாய் காட்ச்சி படுத்தி பார்த்தான்.
கொல்லற்கரிய பிரம்மமும் தட்டு பட்டது..

அறிவு தன் வசிப்பிடம் வந்ததுணர்ந்தான்...
பின் சக்தியே அவனுக்கு முக்தியானாள்...

அதன் பின்னரே மா சக்தி வாழ்கவென்று
ஓங்கி இடித்தான்..

அவள் கடவுள் என்ற தலைக்குள் கட்டு படமாட்டாள் என்று நன்கு அறிந்திருந்தமையால்,
அவள் உறக்கமில்லாத உணர்வு...என்றே தெளிந்திருந்திருப்பான்...
அவன் நிச்சயம் பகுத்தறிவாளன்..

என் சன்னதியில் இவன்..
இவன் சன்னதியில் அவள்...
ஆக அவளும் என் சன்னதியே....

மா சக்தி வாழ்கவே.....!!!
-சங்கர்சிவகுமார்

எழுதியவர் : சிவசங்கர்.சி (29-Mar-15, 10:23 pm)
பார்வை : 118

மேலே