புதுயுக பாரதி - காட்சி 1 குறும் நாடகம்

பாத்திரங்கள்: 1.கண்ணன்
2.குமார்
3.பாரதி

(சாலையில் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி வீறுநடை போட்டு வந்து கொண்டிருக்கிறார். வீட்டு முன்றமொன்றில் கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதனை ஆறெழு பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.)

கண்ணன்:அடக்கடவுளே! நாசமா போபவன் பொம்பலயே இப்படி போட்டு அடிக்கிறானே?

குமார்:ஆமாங்க. இவன் வழமையா இப்படித்தான் அவளே போட்டு அடிப்பான். நாங்களும் டைம்பாஸ்சுக்கு
வேடிக்கை பாக்குறோம்.(கூறிக்கொண்டிருக்கும் போதே பாரதி அருகாமையில் வருகிறார்.)

கண்ணன்:பாவங்க,பாக்க சின்ன பொன்னா இருக்கா.இந்த நாசமா போபவனுக்கு வாக்குப்பட்டு கஷ்டப்படுகிறாலே! இதை யாரும் தட்டிக் கேக்கிறதில்லையா?

குமார்:நல்லா சொன்னீங்க அவங்கிட்டே யாரு வம்புக்கு போவாங்களா? முரடன்

பாரதி:ஹா....ஹா.....ஹா.....

குமார்:என்னையா சிரிக்காய்

பாரதி:ஹா...ஹா....ஹா....

குமார்:எதுக்கப்பா சிரிக்காய் சொல்லேன் நாங்களும் சிரிக்கிறோம்.

பாரதி:(இதழில் இலசான புன்னகையுடன்)
"நான் கண்ட புதுமைப்பெண் எங்கே?
அன்றே பிறது அன்றே இறந்துவிட்டாளா?
பெண்மைக்கு கையோங்கும் கொடியவனே!
உன்னை ஈன்றவளும் தாய் தானே!
கைகட்டி பார்க்கும் கோழையே! நீ வீரத்தாயின்
மார்பில் பால் குடித்தவன் தானே!
அநீதியை வேடிக்கை பார்க்கும் மனிதர்களே!
நீங்கள் உயிரிருந்தும் ஜடமானது எப்போது"
(கவி பாடுகிறார்.வேடிக்கை பார்ப்பவர் எல்லாம் கூனிக்குருகினர்.சண்டையிட்டவனும்
திருந்திக் கொள்கிறான்.)
(தொடரும்..........)

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (31-Mar-15, 1:45 pm)
பார்வை : 1028

மேலே