புதுயுக பாரதி - காட்சி 2 குறு நாடகம்

பாத்திரங்கள்:1.தெருக்கூத்தன்
2.வழக்கறிஞர்
3.ஏழைச்சிறுமி
4.போதையில் கிடப்பவன்
5.பாரதி

(அவ்விடத்திலிருந்து சிறிது தூரம் நடந்து செல்கிறார்.குடித்து விட்டு ஒருவன் படுத்துக்கிடக்கிறான்.பசிக்கு
கையேந்தும் சிறுபிள்ளை அவன் பணப்பையிலிருந்து தென்றலில் பரந்த நோட்டுக்களை பொறுக்கி அவனருகில் வைக்க கள்வன் திருடுகிறான்.)

தெருக்கூத்தன்:ஐயோ! இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க யாருமில்லையா?

வழக்கறிஞர்:இதெல்லாம் ஒரு சின்ன விஷயம் தானே! இதேக் தட்டிக்கேட்டு நேரத்தே வீணாக்க வேண்டுமா?(இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஏழைச்சிறுமி உடைந்த பாத்திரத்தில் நீரெடுத்து
போதையில் படுத்துக்கிடப்பவன் முகத்தில் தெளிக்கிறாள்.)

ஏழைச்சிறுமி:அண்ணா..!அண்ணா...!எழுந்திருங்க..(பாசத்தோடு அவன் கன்னத்தில் கை வைத்து)

போதையில் கிடப்பவன்:(மிக்க தள்ளாட்டத்தோடு எழுந்து அவன் பணப்பையை தேடுகிறான்.)ஏய்! நீதானே
எண்ட காசே எடுத்தாய்.

ஏழைச்சிறுமி:இல்லண்ணா! அம்மா சத்தியமா? யாரோ ஒரு மாமா தான் உங்கட காசே எடுத்துட்டு போனாரு.

போதையில் கிடந்தவன்:பொய் பேசாதே! உன்ன போலீஸ்லே கொடுத்தாத்தான் சரி (வழக்கறிஞரும்
தெருக்கூத்தனும் கைகட்டி நிற்கின்றனர்.சிறுமி தேமி, தேமி அழுகிறாள். வீறு நடைபோட்டு அவனருகில்
மாவீரனாய் வந்து சிறுமியை பற்றி பிடித்த விரல்களை பிரித்து விட்டு சிங்கம் போல் உறுமிக் கொண்டு
ஆத்திரமாய் கவி பூத்தது.)

பாரதி:"ஏய் குடிகாரனே! ஈரமற்ற மிருகமே!!
ஆபத்தில் தோள்தந்தவளுக்கு கள்ளப்பட்டம்
கொடுப்பாயா? ஏழைவீட்டு ஜீவன் பசிக்குக்கூட
திருட்டை வெறுக்கிறது.எந்தக் கயவனோ உன்
பணத்தை திருடினான்.தர்மதேவதையின் பாதுகாப்பாளன்
கறுப்புச்சட்டைக்காரன் நிஜத்தை கண்கண்டான்.
மெய் பேச வெட்கப்பட்டான்.என் சான்றோர் எழுதிய நீதி
நூல்கள் எப்போது செத்தது.இனி தர்மத்திக்கு என்னவேலை
அதுவும் செத்துவிட்டது.
(தெருக்கூத்தனும் வழக்கறிஞரும் குற்றத்தை உணர்ந்தனர். போதை தெளிந்தவன் மெய்யறிந்து சிறுமியை கரங்களால் கட்டி அணைக்கிறான்) (தொடரும்.............)

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (1-Apr-15, 11:37 am)
பார்வை : 649

மேலே