புதுயுக பாரதி - காட்சி 3 குறு நாடகம்

பாத்திரங்கள்:1.வயதான பெண்மணி
2.சீமான்
3.பாரதி

(கிராமிய ஒற்றையடிப்பாதையால் சென்று கொண்டிருக்கும் போது குடிசையொன்றிலிருந்து சத்தம் கேட்டு
பாரதியின் பாதங்கள் மெல்ல நின்றன)

வயதான பெண்மணி:அட சீமான்.........அட சீமான்......எண்ட ராசாவே கொஞ்சம் வாயப்பா.(கடுமையான
இருமலுடன்)

சீமான்:சீச்சி.....இந்த சனியன் எத்தனாம் தடவ கூப்பிடுறா? என்ன உம்மா (உம்மாவை பார்த்த பின் ஆத்திரத்துடன்) சீச்சி இப்பதான் எட்டொன்பது தடவ குளிப்பாட்டி வெச்சே அதுக்குள்ளே சனியன் கண்ட
இடமெல்லாம் அசிங்கம் பண்ணிட்டே(தாய் ஓர் கண்ணீர் கசிந்த பார்வை)

வயதான பெண்மணி:எண்ட ராசாவே! உனக்கு நான் தொல்லை என்றா என்னை கொன்றுடுயப்பா.

சீமான்:இதைச்சொல்லிச் சொல்லியே என்னைக் கொல்லு அதான் உன்ன நானா(அண்ணன்) எனக்கிட்டே
எறிஞ்சுட்டு போனான்.(தாயின் கண்கள் கண்ணீர் மழையுடன்) இப்படியே கேட,நாளைக்கு துப்புரவு பண்ணுறேன்.(கோபத்தோடும் தீராத புலம்பலோடும் வாசலோரம் வருகிறான்.பாரதியை சந்திக்கிறான்)

பாரதி:அட தம்பி என்ன கோபமாய் இருக்காய்

சீமான்:என்னத்தே சொல்ல அந்தச்சனியன் வயசான காலத்திலே செத்து துளையாமே கண்ட இடமெல்லாம் அசிங்கம் பண்ணுறா?

பாரதி:யாரடா தம்பி? என்ன பண்ணா?

சீமான்:எங்க உம்மா தான் காலையிலதான் எட்டுதடவ அசிங்கம் பண்ணா போனா போவட்டும் பாவம்னு
சனியனே குளிப்பாட்டி வெச்சா திரும்பவும்........(இழுக்கிறான்)

பாரதி:(சிறிது நேரம் மெளனம் காத்தபின்)
"ஏழெட்டு தடவ அசிங்கம் பண்ணாலா உன் ஆத்தா.
நெனைச்சு பாத்தாயா நீ சிசுவில் என்பது தடவை அவள்
தேகத்தை அசிங்கம் பண்ணதே!(சீமான் தலை குனிந்து நின்றான்)
உன் பெயருக்கு பொருள் தேடு அகராதியில்
உன் தாயின் பெயரிருக்கும்.
உன் உதிரத்தை கையில் எடுத்துப்பார்
உன் தாய் தெரிவாள்.அவளுக்கு பணிவிடை
செய்வதே புனிதம் நீயோ?அவளை வஞ்சனை
செய்கிறாயடா?(சீமான் கண்கள் கலங்கின)
திருத்தூதர் முஹம்மத் உந்தன் தலைவன் தானே!
அன்னையின் பாதம் சுவனம் என்றது குர்ஆன் தானே!
உன்னை உன் இறைவன் மன்னிப்பானா..!!!!"
(சீமான் தேமித்தேமி அழுதான் பாரதியை கட்டி அனைத்தவனாய்)

சீமான்:என்ன மன்னிச்சுக்குங்க ஐயா!

பாரதி:"எனக்கு நீ என்ன கெடுதல்
செய்தாய்.நான் உன்னை மன்னிப்பதற்கு
அந்த கண்கண்ட தெய்வத்தின் காலடியில்
வாழடா????"(அசிங்கமென்று உரைத்தவன்
அதனை மறந்து அவன் தாயை இரு கையால்
கட்டி அணைத்துக்கொள்கிறான்.) (தொடரும்.......)

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (2-Apr-15, 1:00 am)
பார்வை : 515

மேலே