சிரிக்க - 5

1."அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?""மழை நின்று விட்டதா என்று பார்க்க."

~~~~~~~~~~~~~~~~~~~~

2."கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?""எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."

~~~~~~~~~~~~~~~~~~~~

3."வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்""நாலு செண்ட் தான்""ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..."

~~~~~~~~~~~~~~~~~~

4.எல்.கே.ஜி விஞ்ஞானிஅப்பா: ஏன்டா அந்த காக்காவ தண்ணில முக்கி முக்கி எடுக்குற?
மகன்: எங்க தமிழ் டீச்சர் 'காகம் கரையும்'னு சொன்னாங்க அதான் ட்ரை பண்ணி பார்க்குறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~

5."டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?""அதை அடமானம் வைக்க முடியாதே"

எழுதியவர் : ஷாமினி குமார் (5-Apr-15, 2:46 pm)
பார்வை : 513

சிறந்த நகைச்சுவைகள்

மேலே