கவிதை - உயிர்ப் பிரிந்த நொடி அன்னைக்காக

ஊரோரமாய் உழுது
விளைந்ததோர் காடு
அதை உரசி நின்றதோர்
சிறிய குடிசை வீடு;

அங்கே ஊசி உடல்
உத்தமன் ஒருவன் குருத்தோலைதனை கிழித்து குருடியென்று பெயருற்றதன் அம்மைக்கு உணவளித்து
உறக்கம் கற்பித்தான்;

ஒன்பதாயிரம் நொடிகள் கடந்து உறங்கி கிடந்தவனின் உறக்கத்தை உறுமி சத்தமும்
உறுமல் சத்தமும்
உறிஞ்சத் தொடங்கின;

மனமுறுதியாய் இருந்தும்
உயிர்ப்பயம் உலுக்கியெடுக்க
நீரருந்த சென்றவனின்
நீண்ட ஆயுள்தனை
கள்வனின் கத்தி பறித்திடுமோ?

அன்னைக்கு விழியிலே வெளிச்சமில்லை அவளுக்கு
சேவை செய்ய ஆளீல்லை
உயிர்ப்பயம் எனக்கில்லை இருந்தும்
என் தாய்க்கென உயிர்க்கொடு யென்று கள்வளின் கால்பற்ற;

நெஞ்சில் துளியீரம் இல்லாமல் குருதி குடித்து தன் தாகம் தீர்த்தான் கள்வனவன்;

தாய்ப்பாலாய் குருதியூட்டிய
அன்னையின் மடித்தேடி
அதை அடையாமல் உயிர் பிரிந்தவனின் கேள்விகள்
இதோ.....

அன்னைக்கு விழியில்லை ஆனால் அவள் அன்புக்கு குருடில்லை அவளுக்கு துணையென்று எனைப் படைத்தாய் என்றிருந்தேன்
இன்று கள்வனின் கத்திக்கு இறையாக்கிய கள்ளத்தனம் என்னவோ?

அவள் மண்ணிலே பூத்த பூ அழகிலே மனதைத் திருடும் ஆனால்
அவள் கண்ணிலே பூத்த பூ அந்த அழகை காணயியலாத குருட்டு நோயாகும் கதையென்னவோ?

தன் மகனையிழந்த என் அன்னையின் நாளைய தினம் கேள்விக்குறியோ?

அவன் உயிர்ப் பிரிந்த நேரத்தில் உதித்த வினாக்களுக்கு விடை அறிந்தவர்களில் இறையென்று யாரேனுமுண்டோ?

எழுதியவர் : அரிபா (19-Apr-15, 1:09 am)
சேர்த்தது : ஹரி
பார்வை : 143

மேலே