தண்பதம்

தண்பதம்


முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சேவை நடந்து முடிந்த தேசியக் கருத்தருங்கு வரை நீடித்து வந்துள்ளது. இனியும் நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. காலம் என்னும் காற்றாற்றில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்துறை 2015.02.28 நடத்திய தேசிய கருத்தரங்கில்; வெளியிடப்பட்ட ஒரு நூல் “தண்பதம்”. இந்நூல் 2013ஆம் வருடம் “தமிழியல் ஆய்வுப் போக்குகள் அன்றும் இன்றும்”; என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற தேசியக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் ஏட்டுப்பிரதியின் பிரசுரிப்பாக தண்பதம் திகழ்கின்றது. இந்நூலின் நூன்முகம் தொடக்கம் உள்ளடக்கம் மற்றும் முடிவூரை ஈறாக சகல விடயங்களும் இன்று செம்மொழியாகத் திகழும் தமிழ் மொழிக்கு வாழ்த்துப் பாக்களாகவே அமைந்துள்ளன என்றே கூறுதல் வேண்டும். இந்நூலை மகான்களின் பார்வைக்கும், மாணவர்களின் பார்வைக்கும் சமர்ப்பித்த போது ஒரு மாணவன் என்ற ரீதியில் தண்பதம் எவ்;விதம் இருந்தது என்பது பற்றிய உற்று நோக்கலே இனிவரும் செய்திகளாகும்.

நூன்முகம் என்ற பகுதிக்குள் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்கள் ஆற்றியிருக்கும் நூல் விவரிப்பு ஒவ்வொரு மாணவனையூம் இந்நூலை முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வ சக்தியை தூண்டுவதாக அமைந்துள்ளது. தண்பதம் என்ற போது தமிழ் சிறப்புத் துறை மாணவர்களும் ஐயத்தின் இருப்பிடத்தை நாடினர். சில சந்தேகங்களும்; வாதங்களும் எழுந்தன. இவ்வாறு தோன்றிய ஐயங்களுக்கும்;இ சந்தேகங்களுக்கும்;இ வாதங்களுக்கும் பேராசிரியர் முன்வைக்கும் சிலப்பதிகார விளக்கம் தமிழ் அன்னையைத் தொட்டு பேசுவதாக அமைந்துள்ளது. மேலும் தண்பத உருவாக்கத்திற்கு ஊன்றுகோலாக இருந்த சகல கரங்களுக்கும் நலன் பயக்கும் நன்றி கோரல் தமிழியல் சார்பான நன்றி நவிலலாக அமைந்திருக்கின்றது. நூன்முகம் என்ற விவரிப்பில் பேராசிரியரின் தமிழ் பற்றும்இ அது மாணவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற பெருவிருப்பும் புலனாகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் என்ற ரீதியில் பேராதனைப் பல்கலைக் கழகம் தமிழ்த் துறை சார்ந்த சகல விடயங்களிலும் சகலரும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்ற கூற்றுக்கிணங்கஇ இப்பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவூரையாளர்களான பெருமாள் சரவணகுமார்இ ஆன்யாழினி சதீஸ்வரன் ஆகியோர் தண்பதத்திற்கு படைத்துள்ள பதிப்புரையானது நூலுக்குள் அடங்கியிருக்கும் பொக்கிசத்தின் துகில்களாக இருந்தன. ஒவ்வொரு கட்டுரையாளராலும் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளின் கடுகளவான காரத்தை பதிப்புரையில் பதித்துள்ளார்கள். தமிழியல் ஆய்வூப் போக்குகள் அன்றும் இன்றும் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற ஆய்வூக் கட்டுரைகளின் சிறுத் தூவல்களுடன் அடுத்ததாக ஆதார சுருதியூரை இடம்பெற்றுள்ளது.

தகைசார் ஓய்வூநிலைப் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் அவர்களால் ஆற்றப்பெற்ற ஆதார சுருதியூரையானது தமிழின் தொன்மையை தொட்டுச் செல்லும் அதே நேரம் தமிழின் நவீன போக்கின் போர்வையை விலக்கிக் காட்டுவதாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மெய்யான வழியை பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை கூறிய நினைவூக் கூற்றாக பேராசிரியர் கூறிய போதுஇ இலக்கியம் என்ற பரப்பில் மாணவர்கள் கொள்ள வேண்டிய கொள்ளளவூ பற்றியூம் விபரித்து இருக்கின்றார். மேலும் தனிநாயகம் அடிகளின் தமிழ்ப்பணி பேராசிரியரின் ஆதாரசுருதி உரையில் சீர்த்தூக்கிப் பேசப்பட்டுள்ளது. தனிநாயகம் அடிகளின் தமிழ்ப் பற்றின் தனித்துவத்தையூம் அறிவூத் தேடலின் அவசியத்தையூம் ஆதார சுருதியூரையில் பேராசிரியர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

தண்பதம் என்ற சொல்லாய்வூக்குள் முதல் ஆய்வூக்கட்டுரையாக இருப்பது பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களின் “தமிழில் மொழியியல் கல்வி – அதன் நிகழ்காலமும் எதிர்காலமும்” என்றக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழில் மொழியியல் கல்வி என்பது எத்தகையதொரு நிலையில் இன்று காணப்படுகின்றது என்பதனை தன்னனுபவ கூற்றின் வாயிலாக ஆய்வூக்கட்டுரையை நகர்த்திச் செல்கினறார். மொழியியல் துறையானது பல்கலைக்கழகம் என்ற ரீதியில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்டது பற்றியயும் அதனோடு ஒப்பிடும் போது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் வகிபங்கு பற்றியயும் கூறிச் செல்கின்றார். உணர்ச்சி மிகுதியால் தமிழின் தோற்றம் பற்றிக் கூறும் தமிழ் பற்றாளர்களிடம் தமிழ் மொழியின் அறிவியல் ஆய்வை முன்வைக்க மொழியியலாளர்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனம் பற்றிய செய்திகளை பேராசிரியர்களான வையாபுரிப்பிள்ளைஇ தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்இ தனிநாயகம் அடிகள் முதலிய மொழியியலாளர்கள் தமிழ் மொழியை மொழியியல் துறை என்ற ரீதியில் பார்க்க முனைந்த போது அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த எதிர்ப்பு வாதங்களையூம் விவரித்து, மேலைத்தேய மொழிகளைப் போல் தமிழ் மொழியூம் மொழியியல் துறையில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தையூம் பேராசிரியர் தன் ஆய்வில் கூறிச் செல்கின்றார். தமிழ் மொழியில் மொழியியல் கல்வி மாணவர்கள் மத்தியில் சென்று சேரும் விதம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றியத் தேடலையூம் அவர் ஆய்வுசெய்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவரான பேராசிரியர் விசாகரூபன் அவர்களால் முன்வைக்கப்பட்ட “ஈழத்திற் சங்க இலக்கிய ஆய்வூகள் - கனகசபைபிள்ளை முதல் கைலாசபதி வரை” என்ற ஆய்வூக்கட்டுரையில் சங்ககாலத்தின் தொடர்பு ஈழத்தில் காணப்பட்ட வரலாற்றை ஈழத்து éதந்தேவனாரை வைத்துக் கொண்டுமஇ; “ஈழத்துணவூம் காளகத் தாக்கமும்” என்ற பட்டனப்பாலைத் தொடரையூம் மூலமாகக் கொண்டு நிறுவ முயற்சி செய்துள்ளார். சங்க இலக்கியம் பற்றிய அறிமுகத்தையூம்இ சங்க இலக்கிய பரிச்சயம் நடைபெற்ற விதத்தையூம் காட்டிச் செல்கின்றார். சங்க இலக்கிய ஆய்வூகள் ஈழத்தில் எவ்வாறானதொரு பார்வையில் மீள் வாசிப்பு மற்றும் நவீனப் போக்குகளுடன் ஆராயப்பட்டன என்பதை ஈழத்துக் கல்விமான்களின் ஆய்வூக்கட்டுரைகளையயும் ஆய்வுநூல்களையும் முன்வைத்து காட்டியூள்ளார்.

ஈழத்தில் இச்சங்க இலக்கிய ஆய்வூ இரண்டு வழிகளில் இடம்பெற்றதாக பேராசிரியர் கருதுகின்றார். அவையாவனஇ முதலாவது தனிநபர் நிலைப்பட்ட ஆய்வூ முயற்சிகள்இ இரண்டாவது நிறுவன வழிவரும் ஆய்வூ முயற்சிகள். இதில் தனிநிலைப்பட்ட ஆய்வூ முயற்சியில் சிறந்த ஆய்வாளராக கருதப்பட்ட கனகசபைப் பிள்ளையவர்களால் எழுதப்பட்ட “1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்” என்ற நூலைச் சான்றுக் காட்டுகின்றார். இவரோடு சபாபதி நாவலர்இ கந்தரோடை ந.கந்தையா பிள்ளைஇ நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் முதலியவர்களை தமது ஆய்வூக்குள் உட்படுத்திக் கொண்டார். நிறுவன வழி வரும் ஆய்வூக்கு இவர் முனைப்பாக எடுத்துக் கொண்டது தமிழ் மரபை வளர்க்க அன்று முதல் இன்று வரை பணியாற்றிவரும் இதழ்களையே ஆகும்.

இப்பணியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வெளியீடான இளங்கதிரும் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டுரையில் சங்க இலக்கிய ஆய்வில் ஒரு மடைமாற்றத் திருப்பத்தை ஏற்படுத்தியவராக பேராசிரியர் க.கைலாசபதி முனைப்பாக பேசப்படுகின்றார்.
“இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை ஆளுமைகள்” என்றத் தலைப்பின் கீழ் கலாநிதி க.நாகேஸ்வரன்இ எஸ்.வை.ஸ்ரீதர் ஆகியோர் படைத்தக் கட்டுரையானது தமிழை சிறப்புத் துறையாக கொண்டு தமிழியல்சார் நிகழ்வூகளை நடத்துகின்ற யாழ் பல்கலைக்கழகம்இ கிழக்குப் பல்கலைக்கழகம்இ பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தமிழ்த் துறைத் தலைவர்களாகவூம், பேராசிரியர்களாகவூம் பணியாற்றிய ஈழக் கல்விச் சுடர்களின் தமிழ்ப் பணிகளையூம் அவர்களது ஆளுமை விருத்திகளையூம் விபுலானந்தர் தொடக்கம் பேராசிரியர் சன்முகதாஸ் வரையில் ஒரு ஒட்டுமொத்தப் பார்வையில் தமது ஆய்வூக் கட்டுரையை நகர்த்திச் சென்றுள்ளனர். ஈழக் கல்விமான்களையூம் அவர்களது படைப்புக்களையூம் ஒரு சாராம்ச வடிவில் பெற்றுக் கொள்ள இவ்வாய்வூக் கட்டுரை மாணவர்களுக்கு பெரும்பயனாக அமையூம். இவ்வாய்விற்கு சுவாமி விபுலானந்தர்இ பேராசிரியர் க. கணபதிபிள்ளைஇ பேராசிரியர் சு.வித்தியானந்தன்இ பேராசிரியர் வி.செல்வநாயகம்இ பேராசிரியர் ஆ. சதாசிவம்இ பேராசிரியர் அ.வேலுப்பிள்ளைஇ பேராசிரியர் க. கைலாசபதிஇ பேராசிரியர் சி.தில்லைநாதன்இ பேராசிரியர் அ.சன்முகதாஸ் என்போர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்து பேரதனைப் பல்கலைக்கழக மெய்யியல்துறை விரிவூரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் “அறபு இசை தோற்றமும் வளர்ச்;சியூம் - ஒரு சுருக்க ஆய்வூ” என்ற ஆய்வூக் கட்டுரையானது மாணவர்களுக்கு புதியதொரு பகுதியாகக் காணப்பட்டது. அறபு இசை வரலாற்றின் பரிச்சயம் மாணவர்கள் மத்தியில் அரிதாக இருந்ததன் காரணமாக அது புதியதொரு மாற்று இசை வடிவமாக காணப்பட்டது. அதேவேளை இக்கட்டுரையை முழுவதுமாக வாசித்து முடிக்கும் போது தெரியாத ஒன்றைத் தெரிந்துக் கொண்டோம் என்ற ஒரு திருப்தியூம் இருந்தது. இக்கட்டுரையில் அறபுச் சொற்களின் பயன்பாடும் அதிகமாகவே ; காணப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம் மாணவர்களுக்கு இக்கட்டுரை இலகுவாக புரியூம் படி இருந்தது என்பதை அவர்களுடன் இக்கட்டுரைப் பற்றியக் கலந்துரையாடலின் போது தெரிய வந்தது.

பேராசிரியர் செ. யோகராசா அவர்களின் “ஈழத்துப் போர்க் கால இலக்கியங்கள் - பேசியவையூம் பேசாப்பொருளும்” என்றக் கட்டுரையானது போர்க்கால நினைவூகளை மீண்டும் வாசகர் மனதில் தௌpப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது. பேசப்பட்டப் பொருள் என்ற ரீதியில் போர்க் கால இலக்கியங்களானது மக்களின் இன்னல்களை இலாவகமாக காட்டியவிதம் மாணவர்கள் மத்தியில் இக்கட்டுரைப் பற்றியத் தௌpவை ஏற்படுத்தியது எனலாம். செழியன்இ தமயந்திஇ பசீர்இ நிதுகன் முதலியவர்களின் போர் பற்றிய உருக்கக் கவிகளை சான்றுக்காட்டிஇ இலக்கியம்இ “போர் இலக்கியம்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டமைக்கான காரணங்களை விளக்குகின்றார்;. ஈழத்து போரிலக்கியம் பேசாப்பொருள் என்ற ரீதியில் பேராசிரியரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் போரிலக்கிய மாற்றுப்பார்வைக்கு ஒரு வழிகாட்டியாக அமைகின்றது. இக்கருத்துக்களை அவர் படர்க்கைப் பெயரில் பேசியிருப்பது சிந்திக்கக் கூடிய ஒரு விடயமாகக் காணப்படுகின்றது.

வாய்மொழி இலக்கியங்கள் என்ற சிறப்பைப் பெற்ற நாட்டாறியல் இலக்கியங்கள் தற்கால வழக்காற்றில் சிதைந்து வரும் சூழ்நிலையை கிழக்கிலங்கை என்ற பிராந்திய வரையரையோடும் அச்சிதைவூக்கு இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் பாதிப்புச் செலுத்துகின்ற விதத்தையூம் ஆய்வூச் செய்யூம் வகையில் “கிழக்கிலங்கை பிராந்திய நாட்டாரியலில் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கமும் சிதைவூ நோக்கிய பயணமும்” என்ற கட்டுரை கலாநிதி றமீஸ் அப்துல்லா அவர்களால் படைக்கப்பட்டிருந்தது. நாட்டாரியலின் சிதைவில் பல காரணிகளின் செல்வாக்கு காணப்பட்டாலும் இன்றைய நவயூகத்தில் இலத்திரனியல் தாக்கத்தை ஆய்வின் கருப்பொருளாக கொண்டது சிறப்பாகும். ஆரம்பத்தில் நாட்டாரியல் பற்றிய அறிமுகத்தைத் தந்து மாணவர்களுக்கு இலத்திரனியலின் தாக்கத்தை நாட்டாரியல் வாயிலாக நோக்கும் ஒரு வழிகாட்டலை இக்கட்டுரைத் தந்துள்ளது எனலாம்.

“மாற்றமுறும் மலையகச் சமூகமும் இசைவாக்கம் பெறும் நாட்டாரியல் கூறுகளும்” என்றத் தலைப்பில் வ. செல்வராஜா அவர்கள் முன்வைத்த ஆய்வூக் கட்டுரையானது இன்றைய மலையகச் சமூகத்தின் மீது அவர் கொண்ட பார்வையையூம் அவர்களது நாட்டாரியல் கூறுகள் இசைவாக்கம் பெற்று வருகின்ற விதத்தையூம் கூறுகின்ற போது இந்தியக் கூலிகளாக வருகைத் தந்த மலையக மக்களின் நாளாந்த பண்பாட்டுக் கலாசார அம்சங்களுக்குள் இன்றைய நவீன உலகின் பார்வை தௌpத்திருப்பது ஒரு முக்கிய விடயம் என்றாலும் பாரம்பரிய மரபின் அடையாளங்கள் அழிந்தும் மருவியூம் செல்லும் போக்கு அவர்களது அடையாளங்களை மாற்றமுறச் செய்கின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை சகல சடங்குகளிலும் மலையகச் சமூகம் அசைவியக்கம் பெற்று வருகின்றது. மேநிலை தெய்வங்களையூம் வேத ஆகம விதிகளையூம் தமக்குள் புகுத்திக்கொள்ள முனைகின்றது. பொருளாதார மாற்றமும் இதற்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியூள்ளது. அத்தோடு அரசியல் கருத்தாக்கங்களின் ஊடுறுவலும் ஒரு காரணம் எனலாம். இதனால் நாட்டாரியல்சார் பண்பாட்டம்சங்கள் வழக்கிழந்து வருவது மனக்கவலைக்கிடமான விடயமாகும் என்பதனை வ.செல்வராஜா அவர்கள் தனது நடையில் கூறிச் செல்கின்றார்.

இரா. மகேஸ்வரன் அவர்களால் “இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்களும் தமிழ் நூல் ஆவணமாக்களும்” என்ற தலைப்பின் கீழ் ஆய்வூ செய்யப்பட்ட கட்டுரை தமிழ் நூல் ஆவணமாக்களில் பல்கலைக்கழக நூலகங்களின் வகிபாகம் என்ன என்பதை இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி (university college) 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது அங்குள்ள நூலகத்தின் முதலாதவது நூலகரான ஸ்டPபன் என்ரீட் (Stephen Enright) ) இன் ஆவணமாக்கள் பணி தொடக்கம் இன்றுவரையூள்ள பல்கலைகழக நூலக ஆவணமாக்கள் பணியின் வளர்ச்சியையூம் அதில் ஏற்படுகின்ற மாற்றத்தையூம்இ ஏற்பட வேண்டியூள்ள மாற்றத்தையூம் அலசி ஆராய்ந்து ஒரு வரலாற்று அணகுமுறை வழியாக அவர் சமர்ப்பித்த கட்டுரை பல்கலைக்கழக நூலகம் பற்றியூம் அதில் தமிழ் நூல்களின் ஆவணமாக்கள் முயற்சிகள் பற்றியூம் மாணவர்கள் அறிந்துக் கொள்ள சிறந்ததொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. பாட ரீதியான மற்றும் தமிழ் சமூக ரீதியான ஆய்வூக் கட்டுரைகளின் மத்தியில் இக்கட்டுரையின் எடுகோள் சிறப்பாகவூம் புதியதாகவூம் அமைந்திருப்பதால் மாணவர்கள் கவனத்தில் அதிக ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது.
“Origin and Antiquity of the tamil language in Sri Lanka” என்ற இக்கட்டுரையை பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் ஆங்கில மொழியில் தண்பதத்தில் எழுதியூள்ளார். மொழியின் தொன்மை வரலாற்றை இலங்கையின் தொல்லியல் ஆய்வூகள் மூலம் நிறுபிப்பதற்கு பேராசிரியர் முனைந்துள்ளார். தமிழ் மொழியில் இன்றுள்ள எழுத்தின் தொன்மத்தை அறிய புராதனக்கால கல்வெட்டுக்களின் பிராமிய எழுத்தின் ஒப்பீட்டுக்கு சென்றுள்ளார்;. தொல்லியல் நோக்கில் ஈழப் பண்பாடு பற்றியூம்இ பண்பாட்டில் மொழியின் தொன்மமரபு பற்றியூம் கல்வெட்டு மற்றும் சிதைப்பொருட்களிலும் காணப்படுகின்ற பிராமிய எழுத்துக்களை சான்றாதாரமாகக் காட்டி விளக்குகிறார். இச்சான்றை நிருபிக்க புகைப்பட பிரதிகளையூம் கட்டுரையில் இணைத்திருப்பது சிறப்பு. இது ஒவ்வொரு தமிழ் மாணவரும் கட்டாய வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு கட்டுரையாகவூம் அமைந்துள்ளது எனலாம்.

அடுத்து இறுதியாக தண்பதத்தின் பின்னிணைப்பு என்றப் பகுதிக்குள் கட்டுரையாளர்களின் விபரம் கூறப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக பேராதனைப் பல்கலைகழக தமிழ் துறையால் நடத்தப்பட்ட நான்கு பருவக் கருத்தரங்கு பற்றியூம் அதில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கமும்இ கருத்தரங்கு நிகழ்ந்த காலம்இ இடம்இ கட்டுரையாளர்கள் மற்றும் தலைமையாளர் போன்ற விபரங்களையூம் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவூரையாளர் செ.சுதர்சன் அவர்கள் பருவக்கருத்தரங்கின் இணைப்பாளர் என்ற வகையில் தந்துள்ளார். இது போலவே மாதாந்தக் கருத்தரங்குத் தொடர் பற்றிய விபரங்களை மாதாந்தக் கருத்தரங்கின் இணைப்பாளர் என்ற வகையில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவூரையாளர் எம்.எம்.ஜெயசீலன் அவர்கள்; தன்பதிவைத் தந்துள்ளார். இவை இரண்டும் மாணவர்களை தமிழியல் பட்டறைக்குள் பயிற்றுவிக்க தமிழ்த்துறை ஆக்கித்தந்த மேலதிக அறிவூத் தேடலாகவும்இ பயிற்சிக் களமாகவும் அமைந்துள்ளன. இறுதியாக மாணவர் அடைவு என்றப்பகுதிக்குள் உதவி விரிவுரையாளர் சுமன் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த இளங்கலைமானி தேர்வூக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வூக் கட்டுரைகள் மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் தமிழ்த் துறையைத் தாண்டி பெற்றுக்கொண்ட சிறப்புத் தேடல்கள் என்பவையூம் தண்பதத் திரட்டாக அமைந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நடத்திய தேசியக்கருத்தரங்கின் ஆய்வூக் கட்டுரைகளின் தண்பதப் பதிப்பு மாணவர்கள் என்ற ரீதியில் பயன்பயப்பதாகவே அமைந்துள்ளது. மேலும் தண்பதக் கட்டுரைகள் தேசியக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட போது கட்டுரையாளர்கள் கட்டுரையாக முன்வைத்த விடயங்களை விட மேலதிகத் தகவல்களை குறிப்பிட்ட கட்டுரைக்கான கேள்விநேர ஒதுக்கீட்டின் போது அறிந்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருந்தது. ஒவ்வொருவரது கேள்விக் கணைகளும் குறிப்பிட்ட கட்டுரையை மேலும் செம்மைப்படு;த்துவதாக இருந்தது. குறிப்பாக பேராசிரியர் எம்.எ நுஃமான் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வினாவிற்கு அவர் அளித்த ஒவ்வொரு பதிலும் அவரது மொழியியல் கல்வி என்னும் கட்டுரையில் தந்த விடயங்களையும் தாண்டி ஒரு தேடலின் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

எனவே தேசியக் கருத்தரங்கில் குறிப்பிட்டக் கட்டுரைத் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு கட்டுரையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பதில்களையும் தண்பதத்தில் ஒரு பகுதியாக சேர்த்தால் இன்று உயிர்த் தெழுந்திருக்கும் தண்பதத்தின் சிறப்பும்இ பயனும் தமிழ் மொழி வாழும் வரைக்கும் நிலைக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை. ஒரு மாணவர் என்ற ரீதியில் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளேன். குமரன் பதிப்பகம் வெளியிட்ட தண்பதம் இன்றும் என்றும் தமிழன்னையின் மடியில் ஒரு குழந்தையாக வாழும். இப்பெருமை என்றும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கே சென்று சேரும்.



பா. காயத்திரி
தமிழ் சிறப்புத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

எழுதியவர் : (28-Apr-15, 11:56 am)
பார்வை : 233

மேலே