கசமுசா

பலத்த காற்று பக்குவமாய் வீச
கனத்த ஆலமரம் சாயவில்லை
காய்ந்த பிஞ்சு மரத்தின்
கதிர் சுட்ட சருகுகள் மட்டும் சாய்கிறது

பங்குனி வெய்யிலும் மார்கழி குளிரும்
தாவர வேர்களின் ஊண்றுதலை
சற்றே நடுங்கச் செய்ய
முதல் தொடுகைகளும்
முதல் சந்திப்பு போல மலர்கிறது
புற்புதரில் குடித்தனம் நடத்தும்
பூக்கடை தாத்தாவுக்கும்
சந்தைக்கடை பேத்திமாவுக்கும்

மாதத்திற்கு மாதம் காத்திருக்கும்
தெரு நாய்களைப் போல
வாரத்துக்கு வாரம் சந்தையும் சலூனும்
தம் தொடர்புகளில் தொண்டு ஆற்ற

புருசனின் சாக்கடை நாற்றம் பிடிக்கவில்லை
பூக்கடை வாசத்தில் சரணடைந்த
கயல்மீன்காரியின் காமப்பசியின் ருசி தீரா (கா)சாதலால்

ஊடலோடு கூடுகட்ட மூடோடு
சந்தர்ப்பம் தேடி அலையும்
காமப் பிசாசுகளின் கும்மி விளையாட்டை
பார்த்த குட்டிப் பூனை சில தடவைகள்
இறந்துதான் பிழைக்கின்றது

பேத்திமா புருசனுக்கு -இந்த
கேவலம் கெட்ட கசமுசாவை சொல்ல முடியாது

எழுதியவர் : கீர்த்தனா (3-May-15, 1:58 am)
பார்வை : 162

மேலே