கொடி எங்கே போச்சு

கொடி எங்கே போச்சு?


எனக்கென்னம்மா தெரியும்? எங்காவது வேலிலே படர்ந்திட்டு இருக்கும்.

அடி நான் பெத்த மகளே மலர்க்கொடி, நீ பெத்த மகள் அந்தக் கொடி எங்கடி?

நான் பெத்த மக பேரு லதா-தாம்மா.


அந்தக் கொடியைத்தாங் காணம்ன்னு கேக்கறேன்.

நீ என்னம்மா சொல்லற?

ஏண்டி செம்மொழியாம் நம் தமிழ் மொழிலே அழகான பெயர்கள் ஆயிரக் கணக்கில் இருக்க, நீ மூத்த பொண்ணுக்கு ஸ்வேதான்னும் இரண்டாவது பொண்ணுக்கு லதான்னும் இந்திப் பேர வச்சிருக்க. அந்த ரெண்டு பேருக்கும் என்ன அர்த்தம்ன்னு தெரியுமா?

சத்தியமா தெரியாதம்மா.

சரி இப்பத் தெரிஞ்சுக்க. உன்னால நாலு பேரு மாறினா நல்லது. ஸ்வேதான்னா வெள்ளச்சி லதான்னா கொடி. இது கூடத் தெரியாம என் அழகு பேத்திகளுக்கு இந்திப் பேர வச்சுக் கேவலப்படுத்திட்டியே.

எழுதியவர் : மலர் (3-May-15, 2:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 311

மேலே