பிணவறையில் பிதா மகள்

அன்று கொட்டிய மழையில்.. குடை பிடிக்காமல் ஒருவர் நடை பாதையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது தூரத்தில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு கைதட்டல் கேட்டது.கேட்டதும் அந்த கார் நின்றது.அந்த காரில் மழையில் நனைந்து கொண்டவர் ஏறி கொண்டார்..காரில் ஏறிய அவர் சார் நன்றி...என்று கூறினார்..அப்போது அந்த டிரைவர் எங்க சார் வண்டிய நிறுத்த சொன்னாரு என்று கூற..பின் திரும்பி பார்த்தார்..பார்த்ததும் வியப்பு..கண்களில் தவிப்பு..மனதில் கொஞ்சம் சிரிப்பு.சார் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் ஊமை கவிஞர் உதயா..இவர் இது வரை யாரிடமும் பேசுனது இல்லை..எழுத்துகள் மூலம் பலர் இவரை பற்றி பேசி கொண்டிருப்பார்கள்.அப்போது வண்டியில் ஏறியவர் டிரைவரிடம் கேள்விபட்டிருக்கிறேன்.உண்மை நிகழ்வை எழுதுவதி வல்லவர் என்று..உதயாவிடம் நான் ஒரு உண்மை கதையை சொல்லவா என்று கேட்டார்.கைதட்டல் கேட்டது..பின் தான் கூற வந்ததை கூஒர ஆரம்பித்தார்..என்றும் கோலாகலமான இடம்தான் அது. அங்கு எப்போதும் புன்னகயுடன்தான் மக்கள் இருப்பார்கள்..சிரிப்பை தவிர அழுகை என்ற ஒன்றை கண்டதில்லை..அதான் சேலம் பக்கத்தில் உள்ள சொன்னுர்.சொன்னுர் கிராமத்தை சர்ந்தவல்தான் தீபா.தீப விளக்கை போன்று சொலித்து கொண்டே இருப்பாள்.படிப்பது பனிரண்டு..அன்று ஊர் திருவிழா..ஊரே கோலாகலமாய் இருந்தது...... அப்போது இனிமையான குரலுடன் ஒரு குருடர் தெருவில் பாடி கொண்டிருதார்..அவர் பாடலை கேட்ட மக்கள் அவனை ஊர் திருவிழாவில் பாட சொன்னனர்..இனிமையான குரலை கொடுத்த அவருக்கு கடவுள்.கண் பார்வையை பறித்து விட்டார்..அதனால் மக்கள் அனைவரும் சேர்ந்து அவனுக்கு அங்கேயே தங்கி பாடல் பாடி பிழைத்து கொள்ள சொன்னார்..பின் கோவிலில் அவன் பாடல்கள் எங்கும் ஒலித்து கொண்டு இருந்தது..பல ரசிகர் கூட்டம் கோவிலில் அவன் பாடலை கேட்டு கொண்டு சென்றனர்..அதில் ஒருத்திதான் தீபா...--
தொடரும் 1

எழுதியவர் : எ.எம்.பிரசாந்த (4-May-15, 12:19 pm)
பார்வை : 362

மேலே