தமிழன்

அந்த டீச்சர்ர என்ன பண்றன்னு பாருங்க ,என் மகனை நானே அடிச்சதில்லை ,அவங்க யாரு என் பிள்ளைய அடிக்க ....
அந்த பள்ளிக்கூடம் தூரமாக இருந்தாலும் மலாய்ப் பள்ளின்னு(தேசிய மொழிப் பள்ளி) சேர்த்தா ,மத்த மாணவர்கள் முன்னாள் செருப்பால் அடிப்பான்களா..

கோபத்தில் வானுக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருன்தால் உமா ,

உனக்கு நல்லா வேனும் உமா ,அப்போவே படிச்சி படிச்சி சொன்னேன் தமிழ் பள்ளிலே சேர்துவிடுன்னு கேட்டால் தானே .. உன் விருப்பத்துக்கு பண்ணலே இப்போ பாரு உன்னால் எவ்ளோ ப்ரொப்லெம்னு...சரி வா அந்த டீச்சர்ரெ பார்த்துட்டு வரலாம் ...

வணக்கம் ஆசிரியை
வணக்கம், என்ன விஷயம்
நேற்று என் மகனை என்ன காரணதுக்காக அடிசிங்கனு தெரிஞ்சிக்கலாமா ?
வெல் உங்கள் மகன் வகுப்பில் படம் நடத்தும் போது கவனிக்கல
Then கேள்விக்கு சரியான பதில் சொல்லவில்லை ...
அதுக்காக செருப்பால அடிப்பிங்களா..தப்பு பண்ண கண்டிங்க வேண்டாம்னு சொல்லலே ,பட் யு ஓவர் யுவர் லிமிட் ..
லுக் mrs .உமா உங்களுக்கு இஷ்டம் இருந்தா ஸ்கூல் கு அனுப்புங்க இல்லன வேற ஸ்கூல் மாற்றிகொள்ளுங்கள் .i டோன்ட் ஹவெ எனி ப்ரொப்லெம் ..
நான் போலீஸ்ல ரிப்போர்ட் செய்யபோகிறேன்..
உங்கள் விருப்பம்...


ச்சே ,சரியான திமிர் பிடிச்ச பொம்பளே ..என் புத்திய செருப்பால ...
அடிசிக்கோ ...
என்ன நக்கலா...
அப்படிக்கூட சொல்லலாம் ...
அங்கே பேச துப்பில்ல ,இங்க வந்து வாய் பேசுங்க
உமா தப்பு நம்மமேலத்தான் ,நம்ம நாட்டில் ஏழு விழுக்காடு தமிழர்களுக்காக
நூற்றுக்கும் க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிக்கூடம் இருந்தும் நாம்தானே மலாய் பள்ளி ,சீனப் பள்ளியில் சேர்கின்றோம்..சினர் தன் பிள்ளைகளை தன் மொழிப் பள்ளியிலும் ,மலாய்க்காரர் அவர்கள் மொழிப் பள்ளியிலும் தானே சேர்கிறார்கள்....
வேறு மொழி பள்ளியில் சேர்த்தால் அம்மொழியில் சிறந்து விளங்குவான் என்று தானே அங்கே அனுப்பினேன் .அங்க இப்படிலாம் பண்ணுவாங்கனு எனக்கு எப்படித் தெரியும்
நாம் வீட்டில் என்ன மொழியில் பேசுவோம் ..
தமிழ் ...
ஆறு வயது வரை தமிழ் மட்டுமே கேட்டு வந்த பிள்ளைக்கு எப்படி மலாய்மொழி உடனே புரியும் .தமிழ் பள்ளியிலும் தரமான ஆசிரியர்கள் உள்ளனர்.நாளைய சமுதாயத்திற்கு தமிழ் கற்றுகொடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ..
நாளைக்கு முதல் வேலையாக தமிழ்ப் பள்ளியில் சேர்த்துவிடுவோம் ..
சரிங்க..
ஹ்ம்ம் இதுதான் நல்ல மனைவிக்கு அழகு ..
போதும்...

*எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

எழுதியவர் : rubini .Murugiah (8-May-15, 12:15 am)
Tanglish : thamizhan
பார்வை : 383

மேலே