இந்தியரை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணிக்கு 24 வருடம் ஜெயில்

இந்தியரை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணிக்கு 24 வருடம் ஜெயில்....!

குயின்ஸ் நகர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கிரெகாரி லசாக் முன் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எரிகாவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் உங்களை ( எரிகா ) கைது செய்தபோது,
முஸ்லிம்களையும், ஹிந்துக்களையும் வெறுக்கிறேன்' என்று கோஷமிட்டீர்கள்.
நியூயார்க் நகர ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, எரிகா சிறையில் இருந்தபோது அளித்த பேட்டியில்,

அமெரிக்க இரட்டைக் கோபுரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் அவமதிக்க விரும்பினேன். நீண்ட காலமாக அவர்களைத் தாக்கி வருகிறேன்' எனக் கூறியிருந்தார்.
- இது செய்தி -

நாம என்ன சொல்றோம்னா....நீங்க இந்துக்களையும் சேர்த்தே பார்க்குறீர்கள்.....இங்கே இந்தியாவில் என்னடானா....முஸ்லிம்களை மட்டும் வெறுப்பாக பார்க்கப்படுகிறார்கள்.....

கூடுதலாக எரிகா அம்மையார் இவ்வாறு .சொல்லியிருக்கலாம்....
கருப்பர்கள் / இஸ்லாமியர்கள் / இந்துக்கள் என்று மூவரையும் வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்....

சரி போகட்டும்....அந்த இரட்டை கோபுரம் தாக்குதல் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களோ என்று தான்...

அதுசரி...யூத - கத்தோலிக்க அரசும் இதைத்தானே விரும்புகிறது....!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (22-May-15, 12:23 pm)
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே