சுட்டபுண்

தேவைப் படும்போது
எதுவும் கிடைக்காதே
இந்த வீட்டில் ..
ஆணின் அகங்காரம்..

வார இறுதி நண்பர்கள்
பார்டிக்கு போகும் அவசரத்தில்
எனக்குப் பிடித்த வெளிர்நீல
சட்டை கிடைக்காத கோபம்...

துவைத்தது..இஸ்திரிதான் பாக்கி..
கொண்டு வந்தாள் அவள்..
நானே போட்டுக் கொள்கிறேன்
பற்கள் நறநறக்க..
வெடுக்கென பிடுங்கினேன்..

அடுத்த அறையில்
பாப்பா அழுகை..
ஓடிப் போய்கிறாள்..

ஹாஆஆ...இஸ்திரி பெட்டி
கையில் சுட்டுவிட அலறினேன்...

பாப்பாவையும் இடுப்பில் வைத்து
ஓடி வந்து மருந்து போட்டாள் அவள்..
திரும்பும் போது கவனித்தேன்..
அவள் புறங்கையில் நீண்ட
தீப்புண் காயம்...
அதுவா.. நாலு நாள் முன்பு
குக்கர் சுட்டுவிட்டது....
ஸ்ஸ்ஸ்..குக்கர் சத்தம்வர
சமையலறைக்கு ஓடுகிறாள்..

எழுதியவர் : ஜி ராஜன் (23-May-15, 12:11 pm)
பார்வை : 159

மேலே