மெய்ப்பொருள் காண்பது அறிவு பொள்ளாச்சி அபியின் சிறுகதைகள் திறனாய்வு போட்டி

நகரங்களில் சாதிமத பேதமின்றி மக்கள் இனமொழி வேறுபாடின்றி உயர்வு தாழ்வின்றி முதலாளி தொழிலாளி என்ற பாரபட்சமின்றி வாழ்வதே பொதுவுடமை கருத்துக்களாம்.ஶ

கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் "மெய்ப்பொருள் காண்பது அறிவு"கதையில் உண்மையை பொருள்பட விளங்க வைப்பது இங்கு கதை சொல்லி விளங்க வைக்கிறார் ஆசிரியர் அபி.

நகரத்துவாசியான சண்முகம் தன் கிராமத்து ஊருக்குச் செல்ல காரில் செல்வதில் கூட கெளரவம் பாராமல்

இன்டிகா டொயோட்டா சபாரி இன்னோவா என காரில் செல்ல பிடிக்காமல் ....

அம்பாசிடரை தேர்ந்தெடுத்து பின் இருக்கையில் அமராமல் ஓட்டுநர் பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்வது அவரிடம் உயர்ந்த பண்பை காட்டி அழைதது செல்கிறார் ஆசிரியர்.

செல்லும் வழியில் பென்டிரைவில் நம்நாட்டு பறை இசையை அயல்நாட்டு சங்கீத இசையோடு சேர்த்து ரசிக்கிறார் சந்தோசமாக ஊருக்கு செல்கிறார்.

ஊருக்கு வெளியே உள்ள தேநீர் கடையில் இறங்குகின்றனர் இருவரும்.

தேநீர் கடையில் கடை உள்ளே உள்ளவர்களுக்கு சில்வர் குவளையிலும் வெளியே உள்ளவர்களுக்கு காகிதக் குவளையிலும் கொடுக்கப்பட்டது.தேநீர் குடித்த சண்முகம் கண்களில் கண்ணீர் பெருகியது.

என்னவாயிருக்கும்?

கிராமத்துவாசியான சண்முகம் நகரத்தில் சென்று செல்வந்தனான பின்னும் தன் குல பாரம்பரியம் மறக்கவில்லை .பறை சத்தம் கேட்டு மகிழ்கிறார் அவரும் பழமையை மறக்கவில்லை.

கிராமத்தில் மக்கள் இன்றும் மாறவில்லை என்பதை தேநீர் குவளையில் சாதிமத வேறுபாட்டை கண்டு கண்ணீர் சிந்தியதை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர்.

மற்ற சங்கீதங்களோடு தன் குல பறையிசையை கேட்டு ரசித்த சண்முகத்தின் உயர்விலும் நிமிர்ந்து நிற்கிறார் ஆசிரியர்.

எமது சொந்த படைப்பு
அன்புடன்
ஜெயராஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-May-15, 5:28 am)
பார்வை : 648

மேலே