உன் கொலுசின் ஓசை

ஆயிரம் விழிகள்
என்னை பார்த்துவிட்டுப் போனது
உன் விழிகள் மட்டுமே
என்னை உதறிப் போட்டு விட்டுப் போனது...

என்னை கடந்துபோன
இறைசல்களுக்கு மத்தியில்
மனதுக்குள் வந்து மணியடித்து விட்டுப் போனது
உன் கொலுசின் ஓசை மட்டுமே

எழுதியவர் : parkavi (26-May-15, 9:30 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
Tanglish : un kolusin oosai
பார்வை : 232

மேலே