புரிதலின்றிப் புழுதி மயம்

பழகிய நட்பும் பாங்கான உறவும்
புரிதலின்றி புழுதியாய் ...

யாரோ ஒருத்தியாய் உனைநெருங்க
நடலையில் நசுங்கிநான் நலிவுற
இரட்டைக்கிளவி பிரிந்து பொருளானது .....

நாலுப்பக்கம் சூழ்ந்த புயலால்
நாடுகடந்து செல்லும் நாவாயொன்று
நாதியற்று திக்கித் திணறுகிறது . ..

உறவென்னும் மூடுபனி சூழ
உன்னை நெருங்கும் என்னுருவம்
உன்விழிக்கு ஒளிசேர்க்க மறுக்கிறது .....

மந்தமாருத மொன்றில் மண்டைச்சளி
பிடித்த என்நாசி உன்வாசம் நுகர
முடியாமல் உள்ரோமத்தை நீக்கும்

முயற்சியில் முட்டிமோதி தோற்றதை
முன்மொழியும் முன் நம்முறவு
புரிதலின்றி புழுதியாகி போனது ....

எழுதியவர் : ப்ரியாராம் (27-May-15, 9:56 am)
பார்வை : 104

மேலே