குருவிக்கார குமாரு பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.மனிதனே மனிதனை அடித்துச் சாப்பிடுகிறான்,மேலைத்தேயம் செல்ல வேண்டிய அவசியமில்லை,எமது கீழைத்தேசத்தின் நிகழ்காலமும் இப்படிதான் ஓடிக்கொண்டிருக்கிறது.அகிலத்தின் நிகழ்காலத்தை நிதர்சிக்கும் வண்ணம் 'குருவிக்கார குமாரு'எனும் கதையினில் பல உண்மைகள் படம்பிடித்துக் காட்டப்படுகிறது.கதாசிரியர் அபி அவர்கள் நுண்ணியமாக உத்திகளை கையாண்டு மிகவும் சிறப்பாக கதையை படைத்துள்ளார் என்றால் பழியாகாது.

'குருவிக்கார குமாரு' தலைப்பின் பொருத்தப்பாட்டை நோக்குவோமானால் குமார் எனும் சிறுவன் இயற்கையை ரசிப்பத்தில் ஆழ்ந்த காதல் கொண்டுள்ளவனாக காணப்படுகிறான் என்பதை "சேக்காளிகளோட சேந்து சுத்துறதைவிட,தனியா தோட்டம்,காடு,குளம் குட்டைன்னுதான் சுத்தப் புடிக்கும். வானத்துலே,குளத்துலே,மரத்துலே உக்காந்துருக்குற பறக்குற,பாடுற பட்சிகளை யெல்லாம் பாக்குறதுலதான் அவனுக்கு ரொம்ப இஷ்டம்"மேற்படி கலை வரிகள் சுட்டிக்காட்டுவதோடு பட்சிகள் மீது அவன் கொண்ட விருப்பம்,அன்பு,தன் வீட்டில் வந்தமரும் குருவிகளின் மனநிலையை அவற்றின் செய்கைகள் மூலம் அறிதல் மற்றும் அவற்றை தூரிகையால் வர்ணம் தீட்டிக்கொள்ளுதல் போன்ற காதல் வரிகள் குமார் குருவிகள் மேல் கொண்ட நேசத்தை படம் பிடிப்பதால் 'குருவிக்கார'என்ற அடைமொழியை குமாரின் பெயரோடு அபி இணைத்து கதைக்கு சூடியமை படைப்பிலக்கியத்திற்கு மகுடம் சூட்டுகின்றது.

மேலும் கதையின் ஓட்டமானது நிர்க்கதியாய் தவிர்க்கும் குருவிகளுக்கு தன் இல்லத்தில் வசிப்பதற்கு குமார் இடம் கொடுக்க முயல்தல்,கூடு கட்டுவதற்கு ஓரிரு குச்சிகள் பொறுக்கி கஷ்டப்படும் குருவிகளுக்கு தன் இல்லத்திலிருந்து பஞ்சுகள்,வைக்கோல் என்பவற்றை கொண்டு வந்து கண்ணில் படும் வண்ணம் வைத்தல் மற்றும் அவற்றின் பசிக்காக மூட்டையிலிருந்து அரிசி,சோளம் என்பவற்றை உண்ண வழங்குதல் என்பவை மூலம் ஆசிரியர் கஷ்டப்படும் தனது தோழர்களுக்கு எம்பிடமுள்ள சொத்துக்களை பகிர்த்து வழங்கி அன்போடும் பண்போடும் வாழ வேண்டும் என்ற வாழ்வியல் படிப்பினையை கதையின் போக்கு வாசகனுக்கு வழங்குகிறது.

குமார் தன் அத்தை சரசுவிடம் நேர்ந்த செயலை ஒன்று விடாமல் முழுமையாக தெட்டத்தெளிவாக எத்தி வைக்கும் போது குழந்தை பாக்கியம் இல்லாத தன் நிலையை நினைத்து வருந்துதல், தன் முன்னோர்கள் சொன்ன மரபினை நினைத்து மனம் மகிழ்தல் போன்றவை ஒரு தாயின் குழந்தையில்லாத ஏக்கம் உணர்வு பூர்வமாய் சித்தரிக்கப்படுவதோடு தன் கணவன் காளிமுத்து புகைத்தல்,மது மற்றும் போதைவஸ்து பாவனை கொண்டிருப்பாதால் தான் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை நினைத்து அவள் கண்ணீர் வடித்தல் மூலம் விஞ்ஞான உண்மைகள் கதையில் சொல்லப்படுகின்றமை ஒரு புதுமையான உத்தி எனலாம்.

குமார் குருவிகள் மேல் அளவு கடந்த பாசம் கொண்டு தன் உடன் பிறந்த பந்தமாக நினைத்து அவைகளுக்கு அன்பை அள்ளி வழங்கி அவை அடைகாத்து பொறிக்கயிருக்கும் குருவிக் குஞ்சுகளை கண்டு படம் வரைய பகலிலும் கண் மூடி கனா காணல் அதனை பாழடிக்கும் வண்ணம் காளிமுத்து அதனை அடித்துச் சாப்பிடும் நேரம் கோபம் பொங்கி எழுந்து தன் சித்தப்பனை கோரமாய் தாக்குதல் என்பன உயிர்களுக்கு கஷ்டம் ஏற்படும் வண்ணம் அதனை துன்புறுத்துபவர் கண்டு மெளனம் கொள்ளக்கூடாது. சொந்த பந்தமாக இருந்தாலும் பிழையை தட்டிக் கேட்க வேண்டும் என்பதை உணர்த்தி நிகழ்காலத்தில் நடக்கின்ற மனித படுகொலைகளை தட்டிக்கேட்க புறப்பட்டு மானிடா! என்ற உணர்ச்சி மிக்க வரிகளில் உலகை திருத்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழைப்பை எத்தி வைக்கின்றார் எழுத்தாளர் .

இறுதியாய் தோட்டத்தில் தனிமையில் தூங்கும் போது"சிட்டுக் குருவிங்கெல்லாம் ஆவியா வந்து..அல்லாடிக்கிட்டு அலர்ற சத்தமாக் கேக்குது.“ என்னை மன்னிச்சுக்கோங்க..ன்னு,அவன் வாய் விட்டு அழுகுறதும்,கண்ணுலேருந்து கண்ணீர் தானாப் பொங்கி வழியுறதுமா நேரம் ஓடிகிட்டு
இருந்துச்சு."என்ற வரிகளின் வருடல்கள் உள்ளத்தை பதறவைத்தது விட்டது.மேலும் தன் அத்தை அவனை மகனாக நினைத்து அணைக்கும் நேரம் தத்துப்பிள்ளை தொப்புள் பந்தம் ஆழமாய் வருடல் செய்யப்பட்டு மனதை உடைத்து விட்டதன் மூலம் அன்பின் உச்சம் விழிகள் கண்ணீரால் முழ்கும் வண்ணம் வரிகளாக்கியுள்ளார் எழுத்துச்சிகரம்.மேலும் "ஆமா..எவனோ பொச கெட்டபய சொன்னான்னு, கூட்டுலேருந்த குருவிங்க,அதோட குஞ்சுக, எல்லாத்தையும்,பொறிவெச்சு புடிச்சு,சுட்டுத் தின்னதுமில்லாம, சிட்டுக்குருவி லேகியம் பண்ணி சாப்பிட்டா..இன்னும் வீரியம் கெடைக்கும்னு சொன்னா..எனக்கு கோவம் வராம என்ன செய்யும்..? பெத்த புள்ளைய அறுத்து சாப்பிடற மாதிரி தோணலை. அதுவும் உசிருதானே..! உங்கிட்ட சொன்னதைக் கேட்டுட்டு நீ சும்மா போயிட்டே..,என்னாலே பொறுத்துக்க முடியலை.."என்ற வரிகள் ஒவ்வொருவர் மீதும் நாம் எப்படி அன்பு வைத்தல் வேண்டும் உயிர் என்றால் பெறுமதியானது போனால் வராது.அதனை துன்புறுத்துபவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்ற தீப்பிழம்பை போன்று அறிவில் எரியக்கூடிய அறிவுரையை வாசகனுக்கு பரிசாய் தந்து கதாசிரியர் கதையை முற்றுப்பெறச்செய்கின்றார்.

மேற்படி திறனாய்க்கட்டுரை என் சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர்:மு.ஹ.மு. ஸர்பான்
இடம்:ஓட்டமாவடி-03 இலங்கை
தொலைபேசி இல:94 756795952
தேசிய அடையாள அட்டை இல:972410063V

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-May-15, 1:05 am)
பார்வை : 302

சிறந்த கட்டுரைகள்

மேலே