பேய் காதல் கதை பாகம் 1

எங்க பேச்ச நீ கேட்கவே மாட்டியா....நா எவ்வளவு சொல்லியும் கேக்காம அந்த பேய் பங்களா வாங்குன....இப்ப கூட எங்கள விட்டு தனியா அந்த பங்களா ல தங்க போறேனு சொல்லுற,...
என்ன நீனைச்சுகிட்டு இருக்க உன் மனசு ல....
அந்த பங்களா ல பேய் இருக்காம் டா....டிவி ல கூட சொல்ராங்க.....

என் அன்னை என்னை அர்ச்சனை செய்துக்கொண்டிருக்க என் கவனம் எல்லாம் அலமாரி மேல் இருக்கும் காலேஜ் போட்டோ வில் இருந்தது.....அதில் நான் முதலில் இருந்து நான்காம் இடத்தில் நின்றிருந்தேன். என்னவள் என்னிலிருந்து இரண்டாவது இடத்தில் இருந்திள்...சிகப்பு வெள்ளை சுடிதாரில் தேவதையாக காணப்பட்டாள்.....

அந்த போட்டோ என்னை பின்னோக்கி அழைத்து சென்றது.....
அது ஓர் சுபமுகுர்த்த தினம்...
என் கைபேசி அதிர்ந்தது. நான் தூங்கிக்கொண்டிருந்த சமயம் எடுத்துப்பார்த்தேன் ராட்ச்சசி என்று வந்தது...பச்சை பொத்தானை அழுத்தி ஹலோ என்றேன்.டேய் எரும என்ன பண்ணிட்டு இருக்க..,(அவள் என்னை பெயர் சொல்லி அழைத்ததை விட எருமை என்றழைத்தது தான் அதிகம்) நான் தூங்கிட்டு இருக்கேன் டி செல்லம். சரி சரி இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்ன நாள் டியர்,,,
டேய் விளையாடத டா... சீரியஸ் ஆ தெரியல டியர் என்ன நாள்? உன் பொண்டாட்டிக்கு பிறந்தநாள்
இதுவரை மூடி இருந்த கண்கள் கப் என் திறந்து பார்த்தேன்...செல்போன் ரிமேன்டரில் வந்தது....சாரி மா என்று சொல்லும் முன்பே கட் செய்திருந்தாள்....

என்னடா கல்லு மாதிரி நிக்குற என்று அம்மா என்னை ஒரு உலுக்கு உலுக்க நான் சுயநினைவிற்கு வந்தேன்.

அம்மா என்னம்மா புலம்பிகிட்டு இருக்க....சாப்பாடு எடுத்து வை என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடித்து பைக்கில் கிளம்பினேன்...

மதியம்1 மணி ரொம்ப பசி எடுத்ததால் ரோட்டோரத்தில் இருக்கிற Hotel நிறுத்தி உள்ளே சாப்பிட சென்றேன்.சர்வரிடம் என்னலாம் இருக்கு என்றேன்....அவன் எல்லாம் காலி சார்...தயிர் சாதம் தான் இருக்கு சாப்பிடுறீங்களா? என்றான்.... நான் பசியில் தலை அசைக்க.....

என் முன் தயிர் சாதம் வைக்கப்பட்டது. அந்த தயிர் சாதம் மீண்டும் என்னை பழைய நினைவுக்கு கொண்டு சென்றது.

என்னவளுக்கும் எனக்கும் எவ்வளவு சண்டை வந்தாலும் சாப்பாடு வேலையில் சமரசம் ஆகி விடுவோம். அவள் ஒரு ஐயர் பெண். அப்படி என்றால் அவள் மீன் மற்றும் கவுச்சி யை தொட கூடாதல்ல வா? ஆனால் அவள் கொஞ்சம் வித்தியாச மான பெண்... அவள் கொண்டு வந்த தயிர் சாதத்தை என்னிடத்தில் கொடுத்து விட்டு...என்னிடம் இருந்து மீன் சாப்பாட்டை பிடுங்கி கொள்வாள். அவள் பிறந்தநாள் சண்டைக்கூட அடுத்தநாள் மீன் குழம்பில் சமரசம் செய்துக்கொண்டோம்...

சாப்பிடாம என்ன சார் பார்த்திட்டு இருக்கிங்க,,,என்று சர்வர் உரைக்க சுயநினைவிற்கு வந்தேன்.
சாப்பிட்டு விட்டு மீண்டும் பைக்கில் வீரிட்டு பங்களாவை அடைந்தேன்....தீயில் கருகிய பங்களா அல்லவா??? அதனால்தான் பெயின்டிங் பண்ண சொல்லி இருந்தேன். வேலை நடந்து கொண்டிருந்தது.

நான் வெளியே வந்து கலார நடக்க என்னை ஓர் நடுத்தர வயது ஆசாமி அறிமுகப்படுத்திக்கொண்டார். நீங்க ரொம்ப தைரியசாலி சார் என்றார். என்ன வென கண் அசைக்க.....
இந்த வீட்டுல பேய் இருக்குனு நிறையபேர் பாத்துட்டு பொய்டாங்க.., நீங்கத்தான் வாங்கி இருகீங்க அப்போம் நீங்க தைரியசாலி தான என கண்ணடிக்க..... நான் பதிலுக்கு நீங்க பேய் பிசாச நம்புறீங்களா என்றேன்.., அவர் பதிலுக்கு சிரித்தார்.
என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச்சென்று காபி போட்டுத்தர சொன்னார் மனைவிடம்....

ஓர் குட்டி தேவதை கையில் காபியுடன் வந்தாள். அவளுக்கு 10வயது இருக்கலாம். என்னருகில் வந்து அங்கிள் காபி எடுத்துக்கோங்க என்றாள். நான் So Sweet என்று உன் பெயர் என்ன என்றேன்,... அவள் சப்திகா என்றாள்...

கையில் காபியுடன் அந்த பெயரை சொன்னதும்... என் இதயம் கடந்த காலத்துக்கு பயணித்தது....

ஒரு விடுமுறை நாளில் என்னை அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். நானும் சென்றிருந்தேன். வம்படியாக நான் காபி போடுகிறேன் என்று சமயலறைக்கு போனாள்.
I am so lonely broken angel...
I am so lonely listen to my heart... என்ற பாடல் ஒலித்தது அவள் குரலில்...

(அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடல்..... எப்பவும் அந்த பாடலை முனுமுனுத்து கொண்டே இருப்பாள்)

என்ன ஆச்சரியம்.....
போன ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தாள்.

ஒரு கப்புடன் அருகில் வந்தாள். நீ டேஸ்ட் பாரு என்றாள்... என்ன வச்சு test பண்ணுறியா என்று சிரிக்க,...
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு போட்டேன் தெரியுமா என்று சினுங்க...
சரி சரி குடிக்குறேன் எதுக்கும் Ambulance போன் பண்ணிக்கோ என்றேன்...

இந்த முறை முறைப்பாள் என்று நினைத்தேன் அடித்தே விட்டாள்...

என்ன அங்கிள் காபியை பாத்துக்கிட்டே இருகிங்க என்று அவள் சினுங்க சுயநினைவு திரும்பியது....

காபியை நான் குடித்துவிட்டு.... பங்களாவிற்கு வந்தேன்....
Painting வேலை முடிந்திருந்தது... ஒரு நேர்மையான வேலைக்காரன் ஐயா இந்த மோதிரம் சமயலறை பக்கம் கிடந்தது என்று தந்தான்,,,, அது என் மோதிரம் தான்...

எங்கள் கல்லூரி முடிவுற்ற காலம் எங்கள் காதலும் முடிவுறும் என தெரியாதிருந்தது... என்னவளுக்கு பெற்றோர் இல்லை... அத்தை வீட்டில் வளர்கிறாள்...பல சொத்துகளுக்கு சொந்தக்காரி அவள்

என்னிடம் என்னை அத்தை சொந்த ஊருக்கு கூட்டிட்டு போறாங்க...இனி நாம சந்திப்போமா இல்லையா னு தெரியாது என புலம்ப...நான் ஆறுதல் சொன்னேன் போகும்போது என் மோதிரத்தை கொடுத்து அனுப்பினேன்...

பிரியா விடைகொடுத்து சென்றவள் சாம்பலாய் பிரிந்தே சென்றுவிட்டாள்...

சமயலறையில் கேஸ் வெடித்து இறந்துவிட்டாளாம்...அவள் தோழிமார்களிடம் கேட்டதுக்கு சொன்னார்கள்.

அவள் அத்தை மாமா விற்கு ஒன்றும் ஆக வில்லை...
சமயல்காரர்கள் வரவில்லை....
இவளுக்கு சமயல் செய்யவும் தெரியாது
அவள் எதுக்கு சமயலறைக்கு சென்றாள்.
அவள் சாவில் மர்மம் இருப்பதாய் உணர்ந்தேன்...
ஒன்று மட்டும் புரிந்தது அவள் இனி என்னிடம் பேசமாட்டாள் என்பது...

அந்த சம்பவத்திற்கு பின் இந்த வீட்டில் இரவில் ஏதோ பாடல் ஒலிப்பதாகவும்.... அமானிசியம் நடப்பதாகவும் பயந்து அவள் அத்தை மாமா வேற வீட்டிற்கு சென்றனர்...

வீட்டிற்கு குடிவந்தவர்களும் பயந்து ஓடி விட்டனர்,.. அன்று முதல் இது பேய் வீடாக காட்சி தந்தது....

நான் அவள் நினைவாக இந்த வீட்டை வாங்கினேன்.அவள் ஆத்மா இங்கே உயிரோடு வாழ்வதாய் தோன்றியது தான் காரணம்....

இரவு 11:30 இடியும் மழையும் ஒன்றாக இசையமைக்க I am so lonely broken angel பாடல் அவள் குரலில் ஒலித்தது

நின்றுவிட்டது....

இப்போது

யாரோ என் தோளில் சாய்வது போல் உணர்வு ஏற்பட்டது.... அது யாரோ அல்ல... என் தேவதை....அல்லவா


தொடரும்...

எழுதியவர் : நவின் (14-Jun-15, 2:16 pm)
பார்வை : 3897

மேலே