காவிரி ஆறு பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்” என்று அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆறு

காவிரி ஆறு பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்” என்று அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆறு........

தமிழகத்தின் மையத்தில் இருந்து வட தமிழகத்திற்கு நீர் பாயும் ஒரு முக்கிய வலைப்பின்னலாகவும் இருந்தது. காவிரியில் வெள்ளம் வரும் போது அதை வீணாக்காமல்....... வீராணம் ஏரி வரை கொண்டும் செல்லும் வல்லமையை அளித்தது கொள்ளிடம்தான்.

அப்படி டெல்டாவின் ரத்த நாளமாய் விளங்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உயிரைப் பறிக்கும் மணல் கொள்ளையால்........ கொள்ளிடம் ஆறு முழுவதும் தனது மணலை இழந்து, வெறும் களிமண் தரையாகி விட்டது.

காவிரியில் தண்ணீர் விடுவதால் மணல் குழிகளில் ஓரளவு மீண்டும் மணல் நிரம்பியுள்ளது. கொள்ளிடம் முழுவதும் மணலை வழித்து எடுத்துள்ளார்கள். காவிரி மற்றும் கொள்ளிடத்தில் சுரண்டிவிட்டு கடந்த ஐந்து வருடங்களாக செங்கல்பட்டு சுரண்டினார்கள்.

பிறகு காஞ்சிபுரம் பகுதியை சுரண்டினார்கள். இப்போது காவேரிபாக்கம் பகுதியை சுரண்டிகொண்டுள்ளார்கள். தென்பெண்ணை ஆற்றிலும் மணல் சுரண்டப்படுகிறது.

நல்லகண்ணு மற்றும் பிற சமூக ஆர்வலர்களின் கடுமையான சட்டப்போராட்டத்தின் காரணமாக வைகை மட்டும் குறைந்த அளவிலான மணல் கொள்ளையோடு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அது எவ்வளவு நாளைக்கு என்று தெரியாது...

கொள்ளிடம் ஆறு கீழணை மணல் கொள்ளை, முள்ளங்குடி மணல் குவாரி சட்ட விரோத மணல் கொள்ளை....என்று இருக்கின்றன.
- முத்தமிழ் வேந்தன் -

என்று ஆற்றை சூறையாடி விட்டார்கள் அறுபது ஆண்டுகால தமிழக ஆட்சியாளர்கள் ....மத்திய அரசின் உதவியுடன்.....

ஆற்று நீர், நிலத்தடி நீர், ஆற்று மணல், மலைகள், மலைக்குன்றுகள், கார்னெட் மணல்கள், அலைக்கற்றை, மெட்ரிக்குலேசன் பள்ளி, பொறியியல் கல்வி என்று.....

காற்று, மணல்,குடிநீர், மலை, கடல், கல்வி, மீடியா என்று....
இந்தியாவின் மற்ற மாநிலங்களின் ஊழலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர்கள் தான் அறுபது
ஆண்டு கால தமிழக ஆட்சியாளர்கள்...
மேலும் மேற்கண்ட துறைகளில் பல மாஃ பியாக்களை உருவாக்கிய பெருமையும் இந்த ஆட்சியாளர்களைச் சேரும்.....

எனவே, மத்திய அரசின் அணைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் தமிழகத்தில் துவங்குவதற்கு மனமுவந்து ஆதரவு கொடுத்தார்கள்....

மணலை அள்ளுவதற்காக கடந்த இருபது வருடங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் விடக்கூடாது என்று கர்நாடக அரசின் கை...காலுகளை பிடித்துக் கெஞ்சிக் கதறி அழுதார்கள்....

இதைப்பார்த்த கேரளாக்காரன் முல்லைபெரியாரில் அணைகட்டி கடலில் கொட்டினாலும் கொட்டுவேன்..தமிழ்நாட்டு பிண்டங்களுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று இன்றுவரை அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்....

இதில் உச்சபட்சமாக காவிரி விளைநில டெல்டா பகுதியில் ஈஸ்டன் இந்தியன் கம்பனிக்கு மீதேன் எடுப்பதற்கு கையெழுத்து போட்டுவிட்டு...... தமிழக மக்களுக்கு போஸ் கொடுத்தார்கள் மிக தைரியமாக...

தற்பொழுது கேட்டால் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என்கிறார்கள்....
தெரியாமல் அல்ல..... மத்திய அரசு உத்தரவு போடுவதற்கு முன் ரெடியாக இருக்கிறார்கள்....ஏன் என்றால் இந்த மேற்கண்ட துறைகளில் கொட்டிய / அள்ளிய பணம் தான் காரணம்...

எனவே தான்....கூடங்குளம், மேகதாது அணை...நியுற்றினோ, மீத்தேன், தோரியம், கெயில் பைப் லைன், ராணுவ பயிற்சி முகாம்... தனியாருக்கு பாக் - ஜலசந்தி கடலை விற்றது...இலங்கை ராணுவம் மீனவனை சுட்டுக் கொன்றது.... இன்று வரை பாக் -ஜலசந்தியில் மீன்பிடிக்க முடியாமல் செய்தது.....ராக்கெட் / ஏவுகணை திட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒத்தைக்காலில் நின்றது....

இன்னும் கண்ணுக்குத் தெரியாத..... மக்கள் விரோத திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு..... பெருமளவில் தயாராக இருக்கின்றன மத்திய அரசு எனலாமா...?

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (17-Jun-15, 3:32 pm)
பார்வை : 554

சிறந்த கட்டுரைகள்

மேலே