விண்கலம் க362 - I

&^%*& (*^*&^ %&^&. (*(&*&%^ (*^#&((* &^%(&^(*&( &%*(&^^( (^((&^(*()…..

[இக்கதை நமக்காக தமிழில்... நமது அளவுக்கோள்களுடன்...]


என் பெயர் சால்வ், இந்த விண்வெளி பயணத்தில் எனக்கு விருப்பமில்லை, அரசரின் கட்டளை, வேறு என்ன செய்வது? இதில் மட்டுமா விருப்பமில்லை, எதிலுமே தான். இது நான்காவது கிரகம், இதுவரை 3 விண்கலம், 3 கிரகங்களை நோக்கி சென்றுள்ளன. எந்த ஒரு தகவலுமில்லை. இதுவே ‘என்’, இல்லை ‘எங்களின்’ கடைசி பயணமாகக்கூட இருக்கலாம்....


கவனத்திற்கு....

அரசர் வருகிறார்,


--------------------------------------------------


விண்வெளி வீரர்களே, உங்கள் அனைவரையும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். மேலும், இந்த பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நாம் இதுவரை மூன்று முறை தோல்விக்கொண்டிருந்தாலும் கூட, அதை தோல்வி என்றும் நாம் சொல்லிவிடமுடியாது. எப்படியாக இருந்தாலும், இம்முறை நாம் மிகவும் கவனமாகவும், மிக தயாராகவும் இருக்கிறோம். இந்த முறை நாம் வெற்றியடைய பல புதிய கருவிகளை இணைத்துள்ளோம். அவ்வற்றுள், நமது புதிய தொலைநோக்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். அதைவிட முக்கியமாக நமது [ஏளன சிரிப்போடு], சால்வ் தலைமை ஏற்றுசெல்வதால், நிச்சயம் நமக்கு வெற்றித்தான்.


என்ன சால்வ், வெற்றி பெற்றுவிட்டோம் அல்லவா?, அதாவது, வெற்றி பெற்றுவிடுவோம் அல்லவா?


அரசரின் கட்டளையை அதாவது ஆசையை நிறைவேற்றுவது தானே மக்களின் கடமை.


வீரர்களே, வெற்றி நமதே!


---------------------------------------------------


சால்வ், எல்லோரும் சென்றுவிட்டார்கள். நாம் இன்னும் சில நிமிடங்களில் புறப்படவேண்டும். தயராகவேண்டும், கட்டளையிடு.


கட்டளை....


சால்வ், என்னவாயிற்று உனக்கு? ஏன் கட்டளையிடாமல் இருக்கிறாய்?


நாம் வெற்றியடையப் போவதில்லை.


சால்வ், என்ன சொல்கிறாய்? நீ இங்கே இருக்கும்பொழுது, நாம் நிச்சயம் வெற்றித்தான் அடைவோம்.


இது எனக்கு விரிக்கப்பட்ட வலை. நீங்கள் சென்றுவிடுங்கள். நான் தனியாக பயணம் செய்கிறேன்.


என்ன சொல்கிறாய்? விரிக்கப்பட்ட வலையா? ஏன் இப்படி பேசுகிறாய்? இங்கே பார், நான், சூக், பொரின் எல்லோரும் வின்வெளியில் பயணம் செய்ய எத்தனை ஆர்வமாக இருக்கிறோம். வெற்றியும், தோல்வியும் விரர்களுக்கு சாதாரணம். நாங்கள் எல்லோருமே எதற்கும் தயாராகவே இருக்கிறோம். சால்வ்.... உனக்கு பல முறை அனுபவமும் உண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.


பொரின் யார்?


நமது குழுவிற்கு புதிய ஆள். ஆமாம், நீயும், சூக்கும் பேசவே மாட்டீர்கள். எனது பேச்சு துணைக்காக.


பெண்கள் பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டே தான் இருப்பீர்கள்.


அப்பாடா, இப்பொழுது தான் சால்வ் மாதிரி பேசுகிறாய். அப்படியே எதாவது கிண்டல், கேலி செய்தவாறே கட்டளையிடு. புறப்படுவோம்.


----விண்கலம், புறப்பட தயராகிறது, அனைவரும் தங்கள் இடங்களில் அமரவும்------


இது என்னது? தானியங்கி கணினி பொருத்தியிருகிறார்களா? யார் அனுமதித்தது?


சால்வ், ஏன் கோபப்படுகிறாய்? நானும், பொரினும் தான் அனுமதித்தோம். அதனால் என்ன? இனி நம் கட்டுப்பாட்டில் எதுமில்லை என்று நினைக்கின்றேன், வீணாக எதையும் குழப்பிக்காமல் செயலில் ஈடுபடு சால்வ்.


------------ விண்கலம் புறப்படுகிறது -----------


சால்வ், அடுத்து நாம் என்ன செய்ய?


லினோ, பொரினுக்கு நமது பயணமும், ஆராய்ச்சியும் என்னவென்று தெரியுமில்லையா?


தெரியும்..


தெரியும் சால்வ், எனக்கு லினோ பயிற்சியின் போதே சொல்லியிருகிறார்கள்.


லினோ தான் பயிற்சியா? அப்படி என்றால் உன்னை சோதிக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், நான் கேட்பதற்கு பதில் சொல்லவேண்டும்.


சால்வ், பொரின் யாரென்று நினைத்தாய். அவள் நம்மைவிட திறமைசாலி, அனுபவம் மட்டும் தான் இல்லை.


இருக்கட்டும். பொரின். நமது நோக்கம் என்ன?


உயிர்கள் வாழும் தன்மைக் கொண்ட வேறு ஒரு கிரகத்தை ஆராய்ச்சி செய்ய செல்கிறோம்.


கிரக்கத்தின் எண்?


ம26.


சரி. நாம் செல்லும் விண்கலத்தின் பெயர்? அதன் பலம்?


க362 வகை விண்கலம். இந்த வகை விண்கலத்தில் நான்கவது பயணம் நம்முடையது. இதில் அதிநவீன தொலைநோக்கி பொறுத்தப்பட்டுள்ளது.


அதிநவீன தொலைநோக்கியா?


ஆமாம். நான் சரியாக தானே சொல்கிறேன்.


ஆமாம் சால்வ், தொலைநோக்கி பொறுத்தியுள்ளதே. உனக்கு தெரியாதா?


ம்ம்ம், உண்மையிலேயே நான் தான் இந்த விண்கலத்தை தலைமைவகிக்கிறேனா? சூக். உனக்கும் தெரியுமா? இதைப்பற்றி?


தெரியும் சால்வ். மிகவும் அதிநவீனமாக உள்ளது. நமது இலக்கு கிரகத்தை இங்கிருந்தே பார்க்கலாம். உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.


இல்லை.


அரசர் கூட சொன்னாரே.


கவனிக்கவில்லை. லினோ, அதுவும் தானியங்கியாக செயல்படுகிறாதா?


இல்லை, பொரினுடைய கட்டுபாட்டில் உள்ளது. உனது கட்டளைக்காக தான் நாங்கள் மூவரும் காத்துக்கொண்டிடுகிறோம். அதை செயல்படுத்தி பார்ப்போமா?


சரி.


[பொரின் லினோவிடம் இரகசியமாக] லினோ? இவருக்கு உண்மையிலேயே அனுபவம் உண்டா? எனக்கு தெரிந்தது கூட தெரியவில்லை இவருக்கு?


அப்படியில்லை, சால்வ் கட்டாயத்தின் பெயரில் நம்முடன் வருகிறான். இல்லை என்றால், விண்கலத்தை அலசி ஆராய்ந்திருப்பான். நீ இப்பொழுது தானே எங்கள் குழுவிற்கு வந்துள்ளாய். போக, போக தெரியும் சால்வின் திறமை.


சால்வ், அனைவரின் திரையிலும் இப்பொழுது தொலைநோக்கியின் காட்சி தெரியும்.

லினோ . உயிரினங்களின் நடமாட்டாம் தெரிகிறது! தெரிகிறது! பாருங்கள்.


பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். சூக், நீயும் பாரு.


எனக்கும் தெரிகிறது. எவ்வளவு வேகமாக செயல்படுகின்றன? அட, இதனை நம்மால் ஆராய்ச்சி செய்யமுடியுமா? அதன் வடிவமைப்பை பார் லினோ?


ஆமாம். விசித்திரமாக இல்லை சூக்? உடலைவிட நீளமாக தெரிகிறது கழுத்தும், வாலும். கைகளை பார் மிக சிறியதாக. பொரின். அருமையாக இருக்கிறதல்லவா காட்சி?


ஆமாம், லினோ. மெய் மறந்துபோயிருகிறேன் நான். அதிலும் பல வகை தெரிகிறத்தல்லவா? சில மாமிசம் சாப்பிடுகிறது. சில தாவரம் சாப்பிடுகிறது. நாம் எப்பொழுது அந்த கிரக்கத்தை அடைவோம். நான் அதனுடன் விளையாட வேண்டும்.


நானும் தான் பொரின், சூக் நீயும் வருவாயா?


நானா? அவை நாம் இங்கிருந்து பார்ப்பதால் சிறியதாக தெரிகிறதோ என்னவோ? யாருக்கு தெரியும். சால்வ் சரியாக சொல்வான்.


ஒரு நிமிடம் நீங்கள் யாவரும் அமைதியாய் இருக்கிறீர்களா? நீங்கள் அனைவருமே, முன்பே இந்த தொலைநோக்கியை பற்றி தெரிந்தவர்கள் தானே? இதற்கு முன்பு இதில் காட்சி பார்க்கவில்லையா?


இல்லை சால்வ். அரசரின் அறையில் அல்லவா வைத்திருந்தார்கள்.


என்ன லினோ? பரிசோதனை செய்யாமலா ஒரு கருவியை விண்கலத்தில் பயன்படுத்துவது?


அரசரின் கட்டளை மீறி எப்படி....


சூக், நீயாவது இதை கேட்டிருக்கலாம். என்ன விளையாட்டாக நினைத்தீர்களா? ஒரு வேளை இது நமது இலக்காக இல்லாமல் வேறு எதையோ காட்டினால்?


இல்லை, சால்வ், இது நமது இலக்கு தான்.


பொரின், உனக்கு அரசரின் சூழ்ச்சிகள் தெரியாது. புரட்சியை ஒழிக்க, என்னை மட்டும் அழிக்க துப்பு இல்லாமல். இப்படி உங்களையும் இதில் மாட்டிவிட்டுள்ளார். தானியங்கி இல்லாமல் இருந்திருந்தால், நான் விண்கலத்தை திசை திருப்பிருப்பேன். இதில் இவ்வளவு பெரிய தொலைநோக்கி வேறு. பெரியதாக இருப்பது தொலைநோக்கி தான் என தெரிந்திருந்தால், முன்பே அகற்றி இருப்பேன்.


என்ன சொல்கிறாய் சால்வ்? தொலைநோக்கி நமது இலக்கைத்தான் காட்டுகிறது? இதில் என்ன சூழ்ச்சியிருக்கும்? அதுவுமில்லாமல், இந்த கிரகமும் ஆபாத்தானதாய் தெரியவில்லையே?


சூக், எதை வைத்து சொல்கிறாய்? அது ஆபாதில்லா கிரகம் என்று?


அங்கே பார். எவ்வளவு அழகாய். அமைதியாய் இருக்கிறது என்று. எனக்கும் கூட அந்த நீண்ட கழுத்துக்கொண்ட உயிரனத்தை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது? உனக்கு தோன்றவில்லை?


தொட்டுப்பார்க்க வேண்டும் என்றால் ஆறு கோடி ஐம்பது இலட்சம் வருடங்களுக்கு முன்பே சென்றிருக்க வேண்டியது தானே?


என்ன சொல்கிறாய்? சால்வ்.


உன்னை எல்லாம் எப்படித்தான் விண்வெளி வீரனாக தேர்ந்தெடுத்தார்களோ? நாம் காண்பது அந்த கிரகத்தின் கடந்த காலத்தை. நாம் அங்கு சென்றடையும்போது, அதன் நிகழ்காலம் எப்படி இருக்குமோ? அங்கு நமது இலக்கு இருக்குமோ? இல்லை அழிந்திருக்குமோ? யாருக்கு தெரியும்?


கடந்தகாலம் என்று எப்படி சொல்கிறாய்? புரியவில்லை சால்வ்.


இரு. புரியும் படி சொல்கிறேன். பொரின். ஒரு ஒளியாண்டு என்பது என்ன?


ஒளி ஒரு வருடம் பயணிக்கும் தூரம்.


அப்படி என்றால், ஆறு கோடி ஐம்பது இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருந்து ஒரு ஒளி வருகிறது என்றால், அது எப்பொழுது வந்துசேரும்?


ஒரு நிமிடம்.


என்னது?


இல்லை. கணக்கிட்டு சொல்ல, ஒரு நிமிடம் கேட்டேன் சால்வ்.


சரி.


ம்ம்ம், அறு கோடி ஐம்பது இலட்சம் வருடமாகும். அப்படி என்றால் நாம் காண்பது? அறு கோடி ஐம்பது லட்ச வருடதிற்கு முந்தய கால காட்சியையா?


ஆம்.


எனக்கு தலையே சுற்றுகிறது.


பொரின். கீழே விழுந்துவிடாதே. இன்னும் ஒரு வேடிக்கை இருக்கிறது. தொலைநோக்கியை நமது பூமியை நோக்கி வை.


சரி. திருப்பிக்கொண்டு இருகிறேன். ஆ... நாம் தெரிகிறோம்? இதென்ன? கனவா? புரியவே இல்லை. என்ன இது?


என்ன இது சால்வ்? என்ன இது?


அமைதி. ஏன், எல்லோரும் பதறுகிறீர்கள். அதேபோல் தான் இது நமது பூமியின் கடந்த கால நிகழ்வு. நாம் விலகி செல்ல செல்ல, மேலும் நம் பூமியின் கடந்த காலத்தை காணலாம். கடவுள் இல்லை என்பதை கூட நிருப்பித்துவிடலாம் என்ன?


உனக்கு வேறு வேளையே இல்லையா? சால்வ், ஒன்று அமைதியாய் வருகிறாய். இல்லை என்றால் இப்படி எல்லாம் குழப்புகிறாய்.


நான் ஒன்றும் குழப்பவில்லை லினோ. பொரின். தொலைநோக்கியை நமது இலக்கிற்கு திருப்பு.


இதோ ஒரு நிமிடம்.


எனக்கே இப்பொழுது இந்த பயணத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டது. வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும் முயற்சி மட்டுமே நிலையானது.


வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும் முயற்சி மட்டுமே நிலையானது.....


லினோ, அடி வேண்டுமா?


லினோ, அடி வேண்டுமா?


இரு வருகிறேன்.


இரு வருகிறேன். ஹாஹா... சரி சரி. அடுத்து என்ன? சொல்.


நமக்கு இந்த தொலைநோக்கி பயனுள்ளது தான். நாம் அங்கு சேரும் முன்னரே, அதன் வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம். அப்படியே நாம் ஒரு வேளை உயிருடன் திரும்பினால், நமது பூமியின் வரலாற்றையும் காண்போம்.


உயிரோடு தான் இருப்போம், உயிரோடு தான் இருப்போம்.


பார்க்கலாம். இதில் ஆச்சரியம் நிறைய இருக்கிறது.


எதில்?


இந்த தொலைநோக்கியிலும் அதன் காட்சியிலும்.

[தொடரும்....]

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (25-Jun-15, 12:21 am)
பார்வை : 453

மேலே