விண்கலம் க362 - II

என்ன ஆச்சரியம்?

ஆறு கோடி ஐம்பது இலட்சம் ஒளியாண்டு கடந்தும், எங்கும் தொலைந்துபோகாமல், இன்னும் அது நமது தொலைநோக்கியில் தெரிகிறது, எந்த ஒரு இடையூறுமில்லாமல். ஆச்சரியம் தானே. சூக், தகவல்களை சேமித்து வருகிறாயா?

ஆம் சால்வ்.

சரி. அதை நமது பூமிக்கு அனுப்பியபடியே இரு.

சரி. ஆனால், சில தூரம் தான் அதை செய்யமுடியும்.

எவ்வளவு முடிகிறதோ, அவ்வளவு அனுப்பு. பொரின், தொலைநோக்கியில் ஏதும் பிரச்சனையா?

தெரியவில்லை சால்வ். பார்க்கிறேன்.

பொரின், சால்வ், தொலைநோக்கியில் எதும் பிரச்சனை இல்லை என்று நினைகிறேன். ஒளியில் ஏதோ இடையூறு இருப்பதாக தெரிகிறது.

லினோ சொல்வது சரி என்று நினைக்கிறேன். பொரின், சரிப்பார்த்து சொல்.

இதோ, ஒரு நிமிடம்.

தொலைநோக்கியில் பிரச்சனையில்லை சால்வ். லினோ சொன்னதைப் போல தான். ஏதோ இடையூறு. என்ன காரணமாக இருக்கும்?

தெரியவில்லை. அது நமக்கு பிரச்சனையுமில்லை. சில நேரம் காட்சிகள் தெரியாது. அவ்வளவு தான். என்ன பெரியதாக நடந்துவிடும். சிறுது நேரம் பொறுத்திருப்போம்.

சரி, சால்வ்.

------------------------------------------------------------------------------------------

காட்சிகள் தெரிகிறது சால்வ்.

பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஏதோ வித்தியாசம் தெரிகிறது.

அந்த நீண்ட கழுத்துக்கொண்ட உயிரினங்கள் எதுவும் தென்படவில்லையே சால்வ்.

ஆமாம் பொரின். சால்வ் என்னவாக இருக்கும்?

தெரியவில்லை லினோ. சூக் உன்னால் எதும் யூகிக்க முடிகிறதா?

இல்லை. நாம் இன்னும் சில நேரம் பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

சரி. பார்ப்போம்.

---------------------------------------------------------------------------------------------

வேறு சில உயிரனங்கள் தென்படுகிறது லினோ.

ஆமாம் சால்வ். அப்படி என்றால்? இடையில் பரினாம வளர்ச்சி அடைந்துவிட்டதா அந்த உயிரினம்?

சூக், நீயும் அப்படியா நினைக்கிறாய்.

முழுவதுமாக அப்படி முடிவிற்கு வரமுடியாது. ஆனால், அந்த உயிரினம் அழிந்து போயிருக்க கூட போக வாய்ப்புள்ளது.

நானும் அப்படிதான் நினைகிறேன். நமது பூமியில் தோன்றி அழிந்த டைன் போல? இல்லையா சூக்?

ஆம்.

லினோ, இந்த தானியங்கியை, நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியுமா?

முயற்சி செய்கிறேன். ஏற்கனவே இதற்கு அறிவுரை ஏற்றியிருக்கிறார்கள். நம்மால் இயக்கமுடியாது.

வேகம் அதிகரித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் .

அது முடியும். ஒரு நிமிடம். ஆனால், இதுவே அதிக வேகம் தானே. நாம் ஏற்கனவே இலக்கின் காட்சிகளை மிகவேகமாக பார்க்கிறோம்.

இருக்கட்டும் லினோ, வேகம் தேவை. எனக்கு சந்தேகமாவே இருக்கிறது, நாம் அங்கு சேரும் பொழுது அந்த கிரகம் அழிந்திக்காமல் இருக்கமா என்று.

சரி சால்வ். அதிகப்படுத்துகிறேன்.

------------- வேகம் அதிகரிக்கிறது --------

சூக், உனது கனவு நினைவாகிறது என்று நினைக்கிறேன்.

ஆம், சால்வ்.

என்ன கனவு?

லினோ, பொரின், நமது இலக்கை பாருங்கள். அந்த உயிரனங்களின் பரினாம வளர்ச்சி, மிக தெளிவாக, வேகமாக தெரிகிறது.

ஆம், ஆம், அற்புதமாக தெரிகிறது. இது தான் சூக்கின் கனவா?

சூக், பொரின், லினோ, இந்த இடத்தில் பாருங்கள், பாருங்கள்.

என்ன? என்ன சால்வ்?

நம்மை போலவே ஒரு உயிரனம்.

நம்மைபோலவா? ஆமாம். ஆமாம். எப்படி நம்மைப் போலவே. அதுவும் நமது முன்னர்களைப் போலவே வேட்டையாடுகிறார்கள்.

பொரின், சூக், லினோ, நாம் மிகப்பெரிய சாதனை செய்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றில் இடம் பதிக்கிறோம். சூக், இந்த தகவலை நமது பூமிக்கு அனுப்பமுடியுமா?

இல்லை, சால்வ். நாம் மிக தொலைவு வந்துவிட்டோம். திரும்பி செல்லும்வரை அனுப்பமுடியாது. சால்வ், உண்மையிலேயே நாம் இப்பொழுது சாதனையாளர்கள். அந்த கிரக்கத்தின் உயிரினம், இல்லை நம்மைப்போன்றே இருக்கும் மனித இனத்தைப் பற்றி இப்பொழுது இருந்தே தகவல் சேமிப்போம். நாம் அவர்களை அடையும் பொழுது, நாம் அவர்களிடம் பகிர்ந்துக்கொள்வோம்.

ஆமாம், ஒரு வகையில் இது நமது மனித இன வளர்ச்சிப்போலவே இருக்கும் என நினைகிறேன். என்ன சொல்கிறாய் லினோ?

ஆம். அங்கே பார் சால்வ், சிலர் மோதிக்கொள்வது போல தோன்றுகிறது.

நம்மை போலவே நாடுகளால் பிரிக்கப்பட்டிருக்கலாம். பெரியக்கோட்டைகளைக் கூட கட்டுக்கிறார்கள்.

அதில் சில கோவில்களைப் போல இருக்கின்றன.

இங்கேயுமா? அட முட்டாள்களா? நாம் அவர்களை அடைந்ததும் அவர்களிடம் இதைப்பற்றி தான் பேச வேண்டும். முட்டாள்கள்.

சால்வ், நிறுத்து. கடவுள் இருப்பதால் தான் அந்த கிரகத்திலும் வழிப்படுகிறார்கள்.

ஆமாம், ஆமாம், ஒவ்வொறு குழுவிற்கும், கிரக்கத்திற்கும் ஒரு கடவுளா? நம்மைப் போலவே? பெண்கள் நீங்கள் என்று இந்த மடத்தனத்திலிருந்து வெளி வருவீர்களோ அன்று தான் நமக்கு விடியல்.

போதும் உனது புரட்சிப்பேச்சுகள். இப்படியே பேசிதான், அரசரைப்பகைத்துக் கொள்கிறாய். என்னையும் பகைத்துக்கொள்ளாதே.

லினோ, நான் சொல்வது உண்மையை.

நீயே வைத்துக்கொள் உனது உண்மையை. மறுப்படியும் நீ பேசினால், எனக்கு கோபம் வரும்.

சரி, சரி. நீ என்னதான் கோபப்பட்டாலும், கடவுள் இல்லை, கடவுள் இல்லை. அது இருக்கட்டும், வேறேதும் மாற்றம் தெரிகிறதா பார்.

நீ மீண்டும் இப்படி பேசாதே, நில அமைப்புகளில் மாற்றம் தெரிகிறது. நமது டைன் போன்ற உயிரினங்களை பார்த்தப் போது தெரிந்த நில அமைப்பை விட இது வேறு மாதிரியாகவே உள்ளது.

சற்று, நகர்ந்திருக்கிறது இல்லயா? சூக்.

ஆம்.

பொரின், தொலைநோக்கியின் கட்டுப்பட்டை என்னிடம் கொடு. நீயே நெடு நேரமாக கட்டுப்படுத்திகிறாய்.

இருக்கட்டும், நானே பார்த்துக்கொள்கிறேன் சால்வ்.

சால்வ். அவள் அதில் கைத்தேர்ந்துவிட்டாள். அவளே பார்த்துக்கொள்ளட்டும்.

சரி, நாம் இன்னமும் வேகமாக செல்லலாம் என நினைகிறேன்.

ஏன் சால்வ்?

நம்மைப்போலவே இருக்கிறார்கள். அவர்களின் வரலாற்றைக் காண ஆவலாக இருக்கிறது.

ஆம் எனக்கும் தான்.

எங்களுக்கும் தான்.

சரி, சால்வ். வேகத்தைக்கூட்டுகிறேன்.

----------- மிக அதிவேகம், நிருத்துவது கடினமாக இருக்கலாம், வேகத்தை தானியங்கி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது -----

லினோ? என்ன சொல்கிறது. இந்த கணினி? வேகத்தை அதன் கட்டுப்பட்டில் எடுத்துக்கொள்கிறதா?

ஆம். நமக்கு வேளை மிச்சம். இப்படியே எல்லாமே அதன் கட்டுப்பட்டிலிருந்தால் நன்றாகவே இருக்கும்.

இல்லை லினோ, நமது கட்டுபாடு தான் பாதுகாப்பானது. இவை சரிப்பட்டு வராது. ஒரு நிமிடம் இரு, எதோ தவறு நடக்கிறது. லினோ, நாம் மோசமான நிலைமையிலிருக்கிறோம். நீ...

சால்க், நீ முன்பே கட்டுப்பட்டை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

கடைசியில் என்னையே காரணமாக்குகிறாய்.

ஆம், வேகத்தக்கூட்ட சொன்னது நீ தான்.

சண்டையை நிறுத்துங்கள். அங்கே பாருங்கள். அந்த கிரகங்களில் எங்கும் கலவரம்.

சூக், என்ன இது?

சால்வ், போர். போர் போல தெரிகிறது. அவர்களும் நம்மைப் போலவே போர் செய்கிறார்கள். நவீன ஆயிதங்கள்.

------------------ இன்னும் சில நிமிடங்களில் நமது இலைக்கை அடைவதால், வேகம் குறைக்கப்படுகிறது ------------

நாம் இலக்கை நெருங்கி விட்டோம். அவ்வளவாக வேகம் குறையவில்லை என நினைகிறேன். கணினி ஆயிற்றே பொய் தான் சொல்லும்.

சால்வ், போதும். நான் எது செய்தாலும் தவறு தானா?

அப்படி இல்லை, லினோ? நீ ஒரு புத்திசாலி பெண். ஆனால், புரிந்துக்கொள்ளாமல் நடந்துக்கொள்கிறாய்.

நீ சொல்லிதானே வேகத்தை கட்டுபடுத்துகிறேன்?

நான் தானியங்கி பொறுத்தியதைப் பற்றி சொல்கிறேன்.

தலைமைப் பொறுப்பை நீ சரியாகா செய்திருந்தால், இந்த நிலை ஏற்ப்பட்டிருக்காது.

நான் மட்டும் தான் எல்லாவற்றையும் கவனிக்கவேண்டுமா?

சூக், ஏன் லினோவும், சால்வும் இப்படி சண்டைப்போடுகிறார்கள்.

தெரியவில்லை பொரின். சால்வ், லினோ என்ன பிரச்சனை உங்களுக்குள். நன்றாகதானே பேசிக்கொண்டிருந்தோம்? அங்கே பாருங்கள், அந்த மனித இனம் எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது. அவர்களும் விண்வெளி ஆராய்ச்சி மேற்க்கொள்கிறார்கள்.

விண்வெளி ஆராய்ச்சி மேற்க்கொள்கிறார்களா?

ஆம், பார் சால்வ். செய்றகைக்கோள் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

அப்படியா? நாம் அவர்களை நோக்கி வருவது அவர்களுக்கு தெரியுமா?

இன்னும் சற்று தொலைவில் சென்றால், தெரிந்துக்கொள்வார்கள். அவர்களிடம் நம் அளவு தொலைநோக்கி இல்லை.

தொலைநோக்கி..... தொலைநோக்கியும் தான் காரணம் லினோ.

தொலைநோக்கி நமக்கு பயன்ப்பட்டிருகிறது. சரி, இருவரும் தவறு செய்துவிட்டோம். அரசர் அவசரப்படுத்தினார். அதனால் தான் வேண்டுமென்று தானியங்கிக்கு மாற்றினேன்.

லினோ? என்ன சொல்கிறீர்கள்?

ஆம், பொரின். நான் தான் மாற்றினேன். சால்வ்க்கும் தெரியும். முதலில் இது பிரச்சனையாக தெரியவில்லை.

இப்பொழுது மட்டும் என்ன பிரச்சனை லினோ?

இரு பொரின். சொல்கிறேன். சால்வ், நீயும் தான் காரணம். உனது அலட்சியமும் காரணம். என்னை மட்டும் காரணமாக்காதே.

நானும் காரணம் தான். ஆனால், நீ அரசரின் கைக்கூலியாகிவிட்டாய் இனி பொரினிடமும், சூக்கிடமும் உண்மை சொல்லநேரம் வந்துவிட்டது. ம்ம்ம்.... சூக், பொரின், இப்பொழுது தான் தெரிந்தது, நாம் சரியாக தயாராகவில்லை, நாம் இறக்கப்போகிறோம். நாம் கற்பனை செய்த அளவுகள் தவறாகிவிட்டன. நமது இலக்கான ம26, நமது விண்கலத்தைவிட சிறியதாக உள்ளது, போதாதற்கு மிகப்பெரிய தொலைநோக்கி வேறு. வேகக்கட்டுபாடும் நம்மிடம் இல்லை. நமது இலக்குடன் நமது விண்கலம் மோதப்போகிறது. அந்த இலக்கும் அழிந்துவிடும். நமது விண்கலமும் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும். இது தற்போது தான் எனக்கும் லினோக்கும் தெரிந்தது. அதானால், தான் மாற்றி மாற்றி பழி சொல்லிக்கொண்டோம். மன்னித்துவிடு பொரின், மன்னித்து விடு சூக். மன்னித்து விடு லினோ.

நானும் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்து விடு சால்வ்.

கட்டுப்படுத்தவே முடியாதா?

-------------------------------------------------------------------------------------------

தற்பொழுது....
அரசரின் தனியரையில்...

அரசே, இன்னும் இரண்டு இரகசிய கலகக்காரர்கள் மட்டுமே மீதம். அவர்களில் ஒருவனும் விண்வெளி வீரன், மற்றொருவன் மருத்துவன்.

சரி. விண்வெளி வீரனுக்கு, இன்னுமொரு விண்கலம் தயாராகட்டும். மருத்துவனுக்கு வேறேதும் வழிக்கண்டுபிடிப்போம்.

அரசே, ஒருவனுக்காக ஒரு விண்கலத்தையே அழிப்பது வீண் செலவு. அத்துடன் நமது அப்பாவி மக்களுமா இறக்கவேண்டும்?

புத்திமதி?

இல்லை, இல்லை அரசே, மனதில் தோன்றியது. தவறாக பேசிவிட்டேன். மன்னிக்கவும்.

அமைச்சரே, மதம் தான் விஞ்ஞானத்தை ஆளவேண்டும். மததிற்கும், அரசுக்கும் எதிரான புரட்சி ஒழிய வேண்டும். அத்துடன், வரலாறு நம்மை குற்றம் சாற்றக்கூடாது, சாதனைகளை மட்டும் தான் சொல்லவேண்டும். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். இவை அனைத்தும் சரியாக நடைப்பெறும்.

-------------------------------------------------------------------------------------------

தற்பொழுது....
நமது உலகத்தில்,

என்னடா சயின்டிஸ்ட், என்ன பண்ணிட்டு இருக்க? ரொம்ப சீரியஸா. எப்ப பாரு இந்த டெலெஸ்கோப்ப வச்சிக்கிட்டு என்னதான் பாப்பியோ? குடு நானும் பாக்குறன். என்னடா, புதுசா எதோ தெரிது. விண்கல்லா?

இல்ல.

பின்ன?

ஷட்ள்.

ஸ்பேஷ் ஷட்ளா? எந்த கன்ட்ரிது?

இது பூமிய சேந்ததே கிடையாது.

அப்புறம்?

வேற கிரக்கத்துல இருந்து வராங்க.

சும்மா கத விடாத மச்சி.

நிஜமாதான் சொல்றன்.

என்னோட கணக்குபடி அந்த ஷட்ள், நம்ம உலகத்தவிட பெருசு. தரையிறக்க முடியாது. மோதுனா, நம்ம உலகமே அழிஞ்சிரும்.

என்னடா சொல்ற? இஸ்ரோ, நாசா-ல இருந்து ஒரு நீயூஸும் இல்லையே?

மக்கள் பீதியடையக்கூடாதுனு, அமைதியா இருக்காங்க போல. இரகசிய இராணுவப்படைய வச்சி அந்த ஷட்ள அழிக்கறதா இருக்காங்கனு என்னோட ஃப்ரெண்டு சொன்னான். ஆனா, அது அவ்ளோ ஈஸியில்ல.

ஒருவேளை பக்கத்துல வந்து நிறுத்திடாங்கனா?

நிறுத்திறதா இருந்தா இவ்ளோ வேகமா வரவேண்டிய அவசியமில்ல. ஒன்னு, அவங்க இத ப்ளான் பண்ணி பண்றாங்க. இல்ல, ஷட்ள் கன்ட்ரோல் மிஸ் ஆயிருக்கும். நிச்சயமா மோதப்போகுது.

எப்ப மோதும்னு நினைக்கிற?

இன்னும் ஒரு மணி நேரத்துல.

என்னடா சொல்ற? ரொம்ப தூரத்துல இருக்குற மாதிரி தான தெரியுது? அவ்ளோ சீக்கிரம் மோதிடுமா?

அவ்ளோ வேகமா வருது.

-------------------------------------------------------------------------------------------

அதன் பின்னர்,

சால்வ், சால்வ், அவர்களுக்கு நம் வருகை தெரிந்துவிட்டது. நாம் இப்பொழுது காண்பது அவர்களின் நிகழ்காலம். நம்மை அழிக்க ஆயூதங்கள் சேர்க்கின்றனர். அவர்களிடம் தொடர்புக்கொள்ள முயற்சிக்க வா?

சூக், நம்மை அழிக்க அவரகளது ஆயூதங்கள் போதாது. நம்மால், நாமோடு அவர்களும் இறக்கப்போகிறார்கள். தொடர்புக் கொள்ள்வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் நம்மை தாக்குகிறார்கள். சால்வ், மிகவும் நெறுங்கிவிட்.......

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (25-Jun-15, 9:42 pm)
பார்வை : 437

மேலே