தாய் இல்லாக் குழந்தையின் நிலை

" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""

"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,

" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,

அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'

"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""

"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அம்மா"""""

"பெண்ணைப் பார்த்தால்
தவம்
என்னைப் பார்த்தால்
பாவம் """

"என்னைப் பார்த்தாலோ
எந்த ஊரு,
நீ என்று கேட்க,
இந்தத் தெரு தான் என்று
என் உதடு பிறக்கிறது """

""புத்தகங்கள் சுமக்க
வேண்டிய வயதில்,
செங்கல் சுமக்கிறேன் """'

"தினம் பள்ளிக்கூடம் செல்ல
வேண்டிய வயதில் ,
தினம் ஒரு ஒரு குடம்
தண்ணீர் தூக்கிச் செல்கிறேன்""""

வித்யாசம்
" கையிற்கு செங்கல்
மண்ணிற்கு புத்தகங்கள் """
" எனக்கு
ஒவ்வொருத் தெருவும்தான்,
நான் சென்று வரும் பயணங்கள்""""

" எனக்கு
ஒவ்வொரு மாடிப் படியும்தான்,
நான் ஏறி ஏறி விளையாட வரும் சருக்குகள் """""

" செடி வாடிப்போனால்
தண்ணீர் ஊற்ற
மனிதன் வருகிறான் ...
நானும்தான் தினம் வாடுகிறேன்
தண்ணீர் குடுக்கக் கூட,
மனிதன் வரமறுக்கிறான் அம்மா """"""""""

" உன்னை இழந்து வாழும்
எனக்குக் ,
கடவுள் குடுத்த வரம் ஒன்று ,
அந்த ஒன்று
நான் உறங்கத் தெருவொரம்யெல்லாம்
ஒரு ஒரு திண்ணைதான் அம்மா """

"யாருக்கும் தெரியாது,
மழை வந்தால்,
செடியோடு நானும்தான்,
வாடிப்போகிறேன் என்று""""

"""இப்படி என் உறக்கம் எல்லாம்,
திண்ணையிலும் மலையிலும்
இப்படி என் வாழ்க்கை எல்லாம்,
செங்களிலும் மண்ணிலும் """"""

" தாய் இல்லா குழந்தையைவிடத் ,
தாய் இருந்தும்
தாய் அருகில் இல்லாக் ,
குழந்தையின் மனநிலையில்தான்,
வலிகளே அதிகம் """""""""""""""""

" உங்களால் முடிந்தவரை,
இந்தக் குழந்தைப்போல் வாடியே வாழும்,
இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன் வாருங்கள் """"



இப்படிக்கு

J.MUNOFAR HUSSAIN,
2ND YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI............

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (27-Jun-15, 4:35 pm)
பார்வை : 501

மேலே