2099 டிசம்பர் 26 இரவு 11 மணி விஞ்ஞானிகள் சிறுகதை

ஐரோப்பிய யூனியன் மாதிரி ஆசியாவில் ரஷ்யா,சீனா,இந்தியா,ஜப்பான்,பாகிஸ்தான் இணைந்து ஒரு ஆசிய கூட்டமைப்பை உருவாக்கின. அதன் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒருவர் தலைவராக தேர்ந்து எடுக்க படுகிறார்கள் .CRJIP சர்வதேச விண்வெளிமையம் தன் ஆய்வை தொடங்குகிறது.

அப்போது ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு புதிய ஆய்வு களத்தில் அனுப்பப்படுகிறார்கள்.ஐந்து பேர் கொண்ட குழு 2015 டிசம்பர் 26 இல் புறப்படுகிறது.விண்கலம் புவி ஈர்ப்பு விசையை தாண்டி நிலை நிறுத்தபடுகிறது. ஆனால் சில வினாடிகளில் அது பழுதடைந்து முற்றிலும் மாறுபட்டு புவியை விட்டு விலகி எதிர் புறமாக நகர ஆரம்பிக்கிறது,அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பயத்துடன் மேலும் கீழுமாக சுழலுகிரார்கள்,அது புவியின் வட்ட பாதையை விட்டு முழுமையாக விலகியது.

அப்போது ஆஸ்திரைடு பெல்ட் பகுதியில் உள்ள ஒரு இராட்சத விண்கல்லை நோக்கி சென்று அதன் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு அதை சுற்ற ஆரம்பிக்கிறது,மற்றும் பூமியை விட ஆயிரம் மடங்கு வேகமாக அந்த விண்கல்லை சுற்றுகிறது,மேலும் அந்த விண்கல் ஆஸ்திரைடு பாதையில் இருந்து விலகி சூரியனை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. அது பூவியின் வட்ட பாதை அருகே வரும் போது புவி ஈர்ப்பு விசையினால் ஈர்க்க படுகிறது,விஞ்ஞானிகள் சாதுரியமாக விண்கலத்தை விண்கல்லின் பாதையில் இருந்து விலக்கி விட்டு பின்பு புவியின் வட்ட பாதையில் நிலை நிறுத்துகின்றனர். விண்கல் பூமியை நோக்கி சென்று வெடித்து சிதறுகிறது, ஆனால் விண்கலம் பூமியை விட பல ஆயிரம் மடங்கு வேகமாக சுற்றுகிறது.புவியில் உள்ள ஆய்வு மையத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படியோ சில மாதங்களில் நேரடியாக பூவியை நோக்கி செலுத்தினார்கள். அப்போது எட்டு மாதங்கள் கடந்து இருந்தது.

விண்கலம் ஒரு ஏரியில் இறங்கியது,யப்பாடஎன்று பெரு மூச்சு அனைவருக்கும்.இறங்கி பார்த்தால் அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கள் ஏதோ ஒரு புது உலகத்தை பார்த்த அனுபவம், அவர்களால் இதை நம்ப முடியவில்லை,தங்கள் உறவினர்கள் என்றும் அங்கு யாருமில்லை,எல்லாரும் எங்களை ஏலீஎன்ஸ் என்றே கருதினார்கள்.அப்போது ஒரு ராணுவமே எங்களை சூழ்ந்தது.எங்களை ஒரு காரில் கூட்டு சென்றார்கள்,என்ன ஆச்சர்யம் கார் ஆகாயத்தில் பறக்கிறது, டிரைவர் இல்லை எல்லாம் ஆட்டோமேசன். ஒரு பறக்கும் கட்டிடத்தில் இறக்கி விட்டார்கள்,அவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தெரிந்து இருந்தது. அந்த கட்டிடம் ஆகாயத்தில் மிதந்து இருந்தது , அது மட்டும் இல்லை நிறைய கட்டுமான பணிகள் ஆகாயத்தில் ரோபோ உதவியுடன் மிதக்கும் கட்டிடம் தயாராகி கொண்டு இருந்தது.அப்போது விஞ்ஞானிகள் அடங்கிய கூட்டம் ஒன்று அவர்களை விசாரித்தது. "நீங்கள் எல்லாம் யார்" என்று அதற்க்கு அவர்களில் ஒவ்வொருவரக " நான் ரஷ்யன், இந்தியன் என்றார்கள்" இவர்கள்.

அதற்க்கு அவர்கள் "நீங்கள் ஆசியாவை சேர்ந்தவர்களா? என்றார்கள் அந்த கண்டம் 2015 டிசெம்பர் 26 இலே முழுவதுமாக மூழ்கிவிட்டது இப்போது நீங்கள் நின்று கொண்டிருப்பது அன்றைய பசுபிக் பெருங்கடல் இன்று பசிபிக் பெருங்கண்டம் 2015 இல் உருவான மோசமான விண்கல் மோதலால் ஆசிய கண்டமும் ஐரோப் அமெரிக்க கண்டமும் பெரும் அழிவை சந்தித்தன. அப்போது தப்பித்த கண்டம் ஆப்ரிக்காவும், ஆஸ்திரேலியாவும் மட்டும் தான்.இப்போது அவைகள் கடல் பகுதியாக மாறி விட்டன ,2048 ஆம் ஆண்டு நடந்த அகல்வாரைசீயில் கண்டு பிடிக்க பட்ட குறுந்தட்டு மற்றும் ஹார்ட் டிஸ்க் இல் எங்கள் முன்னோர்கள் இந்த அழிவை பற்றி கூறி இருகிறர்கள்" என்றனர். அப்போது அவர்கள் "என்னது நாங்கள் சென்றே 8 மாதங்கள் தான் ஆகிறது;எங்கள் நாள்காட்டியின் படி இப்போது ஆகஸ்ட் 25 2016 என்றனர்".

அதற்க்கு அந்த விஞ்ஞானிகள் பகீர் சிரிப்புடன் இது 2099 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இரவு 11 மணி என்றனர். இவர்களுக்கு தலையே சுற்றியது, மேலும் உலக வரை படத்தை எடுத்து காண்பித்தனர், என்ன ஆச்சர்யம் மொத்தமே இரண்டே கண்டங்கள் ஒன்று ஆழ கடல் பகுதியான பசிபிக் கண்டமும் , ஆஸ்திரேலிய கண்டமும். அப்போதுதான் இவர்களுக்கு புரிந்தது விண்வெளியில் விண்கலம் பல்லாயிரம் மடங்கு வேகத்தில் சுற்ற பயணம் செய்யும் போது அங்குள்ள நேரமே இவர்களுக்கு செலவழிக்க பட்டுள்ளது, ஆனால் புவியில் எண்பத்து நான்கு ஆண்டுகள் செலவழிக்க பட்டுள்ளது. மேலும் இவர்கள் விண்கலம் புவியை விட்டு விலக காரணம் இவர்களுக்கு புரிந்தது. அன்று திடீர் என வந்த அந்த விண்கல் தான் என்பதும் அவர்களுக்கு புரிந்தது.இந்த விண்கலத்தில் இருந்த குறிப்புகளை வைத்து இவர்கள் ஆசியன் என்பது இப்போதுள்ள வர்களுக்கும் புரிந்தது.

ஆனால் இவர்களால் 2099 நவீன உலகத்தில் தங்களை தயார் படுத்தி கொள்ள முடியவில்லை. காரணம் இவர்கள் உறவினர்கள் என்றும் யாரும் இல்லை, நவீன உலகத்தில் எப்படி இருப்பதும் என்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் பசிபிக் பிராந்தியதின் அதிபரை சந்திக்க சென்றார்கள் . அதிபர் யார் என்றால் ஒரு ரோபோ, இவர்களுக்கு மேலும் ஒரு ஆச்சர்யம் இந்த ரோபோ அதிபர்ருக்கு தேர்தல் எல்லாம் இல்லை, எதாவது குறைபாடு இருந்தால் அது தன்னை செயல் இழக்க செய்து இன்னொரு ரோபோவை தேர்ந்து எடுத்து விடுமாம் , அதனால் ஊழல் என்பதே இல்லை . மக்கள் அனைவரும் அரசை நம்பு கின்றனர். இவர்கள் ரோபோ அதிபரிடம் தாங்கள் ஒரு ஆராய்ச்சியை தொடங்க இருபதாகவும் அதன் மூலம் நாங்கள் எங்கள் கடந்த காலத்திற்கு செல்வோம் என்றார்கள் . அரசும் அதற்க்கு அனுமதியை அளித்தது . அவர்கள் தங்கள் முயற்சியை தொடங்குகிறார்கள் நாள் 2099 டிசம்பர் 26 இரவு 11 மணி... மீண்டும் ஒரு விண்கல் வருகிறது .....

எழுதியவர் : பிரேம் லெனின் (1-Jul-15, 12:48 am)
பார்வை : 712

மேலே