சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 7

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக்காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 7 ஆம் பாடல்.

பாடல் 7 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செப்பிள முலைநன்மங் கையொருபா
...கமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே
...லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான
...பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

செப்புப் போன்ற இளமையான மார்பகங்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவபிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தில் புகுந்து எழுந்தருளிய காரணத்தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து தொல்லை செய்து துன்புறுத்தாது. அதுபோல அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை :

செப்பு – சிமிழ், அடைவுஆர் – அடைதலுற்ற,

அப்பு - கங்கை, வெப்பு – வெம்மை, சுரநோய், சிலேத்துமம்,

வாதம் – வளி, பித்து – பித்தம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-15, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே