பாபநாசம் படம் குறித்து கவிஞர் இரா இரவி

பாபநாசம் படம் குறித்து ! கவிஞர் இரா .இரவி !

படம் பார்த்தேன் .கமல் நடிப்பைப் பாராட்டலாம் .பணக்கார வீடுகளில் பணமும் செல்லமும் தந்து மகனை சரியாக வளர்ப்பதில்லை என்று வலியுறுத்தும் கருத்து நன்று. அலைபேசியை நல்ல விசயத்திற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் .தீய விசயத்திற்கு பயன் படுத்தக் கூடாது என்று வலியுறுத்தும் கருத்தும் நன்று.ஆனால் இந்தப் படத்தின் மூலப்படமான திரிசியம் மலையாளப் படத்தை தணிக்கை எப்படி அனுமதித்தார்கள் என்பது புதிராக உள்ளது. பொதுவாக கொலை செய்தவர்கள் தண்டிக்கப் படுவதாகவே படம் முடியும் .

காவல் துறை உயர் அதிகாரி மகனைக் கொலை செய்துள்ளனர். அவன் ஒரு குற்றாவளிதான் .இருந்தாலும் .கொலை செய்து விட்டு சாட்சியங்களை அழித்து விட்டு கொலை செய்த பிணத்தை காவல் நிலையத்திலேயே புதைத்தும் விடுகிறார் .குடும்பமே நாடகமாடி காவல்துறையை முட்டாளாக்குவது சரியா ?

கொலை செய்தது தெரிந்தும் காவல்துறை உயர் அதிகாரி கைது செய்யாமல் அவர் ராஜினாமா செய்து விடுவது நம்பும் படி இல்லை. நடைமுறையில் சாத்தியமா ? குற்றாவளி என்றால் அவனைக் கொலை செய்து விட்டு சாட்சியங்களை அழித்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் படத்தின் நீதியா ?

தவறான கருத்தை மக்கள் மனதில் விதைப்பதாகவே கருதுகின்றேன். படத்தின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Jul-15, 4:48 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 187

சிறந்த கட்டுரைகள்

மேலே