உழைப்பின் சிகரம் உழவன்

உதயம் என்னும் காலையில் எழுந்து...
இதயம் முழுதும் இன்பம் வழிந்து...

சிகப்பு என்னும் மண்ணை மிதித்து...
முகப்பு சுற்றிலும் வேலி பதித்து...

வெள்ளை என்னும் ஆவினை கூட்டி...
முல்லை மரம் கொடுத்த ஏரினை பூட்டி...

கருப்பு என்னும் மண்வெட்டியை தொழுது...
மறுப்பு காட்டாத நிலத்தை உழுது...

பழுப்பு என்னும் விதையை எடுத்து...
செழிப்பு தரும் இடத்தில் விதைத்து...

நீலம் என்னும் தண்ணீர் பிடித்து...
உள்ளம் பொங்க பாத்தியில் பாய்த்து...

பசுமை என்னும் செடியினை நெய்து...
வலிமை பெற்றதும் அறுவடை செய்து...

மங்கும் பொழுதிலே மயக்கமிட்டு...
பொங்கும் இன்பத்துடன் துயிலிட்டு...
இதுபோல் மூன்று காலமும் அவலமிட்டு...
பிறர் வாழ்வில் வர்ண ஜாலமுடன் கோலமிட்டு....

உழைப்பு என்னும் ஊழ்வினையிலே...
உவகை கொள்ளும் உழவனே !!!
-- அல்லும் பகலும் அயராது உழைக்கும் உழவனுக்கு சமப்பணம்...

எழுதியவர் : அருண் கார்த்திக் (6-Jul-15, 11:10 pm)
பார்வை : 248

மேலே