நச்சுப் புகை

விரலிடையில் இருக்கும்
சிகரெட்டின் நுனி
உன் நுரையீரலுக்கு நீ
வைக்கும் வெடிகுண்டின் திரி!!

உன் நுரையீரல் மட்டுமே வெடிக்கட்டும்
ஊருக்கு வெளியே போய் புகை
நச்சுப் புகை
எல்லோருக்கும் தான் பகை

தேநீர் நிலையங்களுக்கு வருபவனெல்லாம்
புகைப்பவன் அல்ல
தேநீர் விரும்பிகளையும்
புகைப்பவன் ஆக்காதீர்

எவ்வரசும் எத்தீமயையும்
அனுமதிப்பதில்லை
மதுவும் புகையும் எக்காலமும்
வாழ்கிறது நம்மில் விதிவிலக்காய்!!!

எழுதியவர் : சம்பத்குமார் (22-Jul-15, 3:45 pm)
பார்வை : 124

மேலே