கலாமுக்கு ஓர் கடவுள் வாழ்த்து

மனிதனாய் பிறந்து கடவுளாய் வாழ்ந்து
காலத்திற்கும் காவியமாணவனே
உனக்கு மனித துதி போதாது
கடவுள் வாழ்த்தே கால பொருத்தம் ...........

ஏழையாய் பிறந்து இமயம் கடந்து
எல்லோரிலும் நிறைந்த நீங்காத நினைவே -
சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவன் நீ
சமத்துவத்தில் முதலிடம் பெற்றவனும் நீ ............

மனிதனின் வாழ்வை வரையறுத்த இலக்கணமே
உன் இழப்பு சாதாரண இழப்பல்ல
எங்களின் ரத்தத்தில் அணுவாய் கலந்து உன்னை இழந்து
அழியா துன்பம் அடைந்திருக்கிறோம் என்பதே உண்மை ...........

நம்பிக்கை விதையை
நாளெல்லாம் விதைத்த
இளைஞர்களின் வழி காட்டியே
விழி ததும்புகிறது வேதனையில் ..........

காலம் கண்டெடுத்த கருணைக்கடலே
இரக்கத்தையும் அன்பையும் எல்லோரிடத்திலும்
இணையாய் பகிர்தவன் நீ
வேற்றுமையை வேறருத்தவனும் நீ ............

தமிழ்த்தாயின் தலை மகன் நீ
தன்னிகரில்லா பெருமகன் நீ
உலகமெலாம் தமிழனின் பெருமையை
ஓங்கி ஒலித்தவன் நீ ..............

கருவறை பிறப்பினை கண்டு மகிழ்ந்தவர்
உன் கல்லறை பயணத்தை கண்டு துடிக்கிறோம்
தாயையும் தந்தையையும் சகோதரனையும் நண்பனையும்
இழந்ததைப்போல எல்லோரிலும் பீரிட்டு பாய்கிறது பெரும் துக்கம் .........

கனவு காணுங்கள் என்ற வார்த்தையை விதைத்தவரே
இனி உன்னை கனவில்தான் காண்போமா என்று
வேதனையின் வலியில் விம்மி அழுகிறது
அத்தனை மனமும் ...........

முதுமையிலும் குழந்தையாகவே வாழ்ந்து
மூச்சடைத்த மனிதா உன் எளிமையை என்னவென்று சொல்ல
இன்று மறைந்தாலும் எங்களில்
என்றுமே வாழ்வீர் என்பது நிச்சயமே ............

மதத்தை தாண்டியும் மனிதநேயம் படைத்த இறை தூதரே
நல் மாண்புகளால் வானம் உயர்ந்த பண்பாளரே
சக மதத்தையும் சமமாய் மதித்த சமதுவவாலரே
நீர் சாதாரண மனிதா பிறப்பல்ல கடவுளின் அவதாரம் ...........

கருணையையே கண்ணில் காட்டியதால் -
மனிதனாய் பிறந்த கடவுளின் அவதாரம் நீ
ஆதலால் ,
இன்று உனக்கு படைக்கிறேன் ஒரு கடவுள் வாழ்த்து ..............


பெரும் துக்கத்துடன்

கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (28-Jul-15, 8:21 am)
பார்வை : 171

மேலே