அப்துல் கலாம் சைவப் பிரியராக மாறியது எப்படி

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசின் கல்வி உதவித்தொகை மூலம் அப்துல் கலாம் இயற்பியல் படித்துவந்த வேளையில் குடும்ப வறுமையால் அந்த உதவித் தொகையை மட்டும் வைத்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

எனவே, அதிகம் செலவாகும் என்பதால் அவர் அசைவ உணவு உண்பதை தவிர்த்தார். பின்னாளில், அவருக்கு சைவமே மிகவும் பிடித்துப்போனதால், கடைசிவரை சைவப் பிரியராகவே இருந்து விட்டார்.

கலாம் அவரது அம்மா ஆஷியம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர், அவ்வப்போது அம்மாவுடன் சமையலறையிலேயே உணவு உண்ணும் வழக்கம் அவருக்கு இருந்தது. வாழை இலையில் அம்மா பரிமாறும் சாம்பார் சாதமும், தேங்காய் சட்டினியும் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்துள்ளது.

இதுதவிர, பிரபல ஐய்யங்கார் வகை உணவுகளான புளியோதரை, வெந்தயக் குழம்பு போன்றவற்றின் சுவைக்கு இவர் மனதைப் பறிகொடுத்தார். தனது சைவ உணவுத் தேர்வு தொடர்பாக கூறும்போது, ‘காய்கறிகளால் ஆன எதையேனும் சூடாக கொடுத்தாலே போதும்.

அதைக்கொண்டே காலத்தை கடத்தி விடுவேன்’ என தெரிவித்தார். கல்லூரி காலத்தில் எப்போதாவது ’பண்டிகை விருந்து’ போல் அவர் உண்ட அசைவ உணவு ‘கேரள புரோட்டாவும், முட்டை மாசாலாவும்’ என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலிருந்து, கேரளா வரை வெவ்வேறு இடங்களில் பணிக்காக செல்ல வேண்டியிருந்தபோது, தமிழக உணவு வகைகளுக்காக சமையலுக்கு ஏங்கியவராய் தனது இளமைக் காலத்தில் நெடுந்தூரம் பயணித்திருக்கிறார், கலாம்.

நன்றி ஜேவி பி தளம்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (29-Jul-15, 4:37 pm)
பார்வை : 322

மேலே