அப்துல் கலாம்

மண்ணின் மாண்பு குறைந்துவிட்டதால்
விண்ணைப் பார்க்கச் சென்றாயா…?!

விண்ணைப் பற்றிய விவரம் தெரிந்ததால்
மண்ணை விட்டுச் சென்றாயா…?!

விழித்திருக்கச் சொன்னதெல்லாம்
விடைகொடுக்கத் தானா….?!

படைப்பலங்கள் என்னாகும்
பாதியிலே போனா.....?!

உன் எளிமை
போற்றுதற்க்குரியது.....!!

உன் பெருமை
பூசிக்கத்தக்கது.....!!

ஆயிரம் அறைகள்
கொண்ட மாளிகையில்
ஆடம்பரமின்றி
அமைதியாய் வாழ்ந்தாய்....!!

உன் எளிமை
போற்றுதற்க்குரியது.....!!
உன் பெருமை
பூசிக்கத்தக்கது.....!!


கையளவு
காசுகிடைத்தாலே
கடலளவு
ஆசைப்படும்
கூட்டத்தில்.....
கடலளவு
வசதிகளை,
கையளவு கூட
அனுபவிக்காத
அற்புதப் பிறவி நீ....!!

மக்கள் தலைவன்
மாளிகைப் பார்க்க
வந்து சென்ற
உறவுகளை
சொந்த செலவில்
உபசரித்து......அவர்கள்
உண்ட உணவுக்கான
தொகையைக் கூட
பிறரறியாமல்
செலுத்தியதென்பது
வரலாற்றுப் புரட்சி....!!


எங்களூர்
முன்னாள் அமைச்சர்
வீட்டுச் சமையலுக்கு
இன்னமும்
இனாமாகவே
வந்து கொண்டிடுக்கிறது
இறைச்சி.......!!

உன்
பாதுகாவலன்
நெடுதூரம்
நிண்றுகொண்டே
பயணித்ததை
நேசத்துடன்
விசாரித்ததை......
எங்கள்
தலைவர்கள்
பயணத்தில்
தொங்கிக்கொண்டு
போனதை நினைத்து
நொந்துக் கொண்டிருப்பவர்கள்
நினைத்து, நினைத்து
வியக்கிறார்கள்.......!!

நீ
விஞ்ஞான யுகத்தின்
வீரிய வித்து….!!
எம் பாரதத்தின்
தேசியச் சொத்து…..!!

முனகிக் கொண்டிருக்கும்
மொகல் தோட்டப் பூக்களுக்கு
நீர் வார்க்க ஆட்களுண்டு…..!!
நேசத்தை வார்த்தவன் நீ….
நிரந்தரமாய்த் தூங்கலாமா…..??

அரசே….!

அப்துல் கலாம்
ஐம்பது வருடங்களுக்கு
மேலாக
ஒரு அரிய புத்தகத்தை
பாதுகாத்து
வைத்திருந்தாராம்….!!
அதைக் கொஞ்சம்
பிரதியெடுத்து
எங்கள்
பிள்ளைகளூக்குப்
படிக்கக் கொடுங்கள்….!!

தாய்மார்களே…!!

இனி உங்கள்
குழந்தைகள்
“அ” என்றால்
அப்துல் கலாம்
என்றே
அறிய வையுங்கள்….!!!

எழுதியவர் : இரவி (30-Jul-15, 5:13 pm)
Tanglish : apthul kalaam
பார்வை : 7108

மேலே