நாராயணசாமியும், நண்பர் மண்ணுசாமியும்

நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.

பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி.

நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு
பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.

நாராயணசாமிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.
பந்தயத்தின்படி, வென்ற மண்ணுசாமிக்கு விருந்து வைத்தார் நாராயணசாமி.

அப்போது மண்ணுசாமி,

“உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன்” என்றார்.
அதற்கு நாராயணசாமி வருத்தத்தோடு சொன்னார்,

“நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை”

எழுதியவர் : முகநூல் (30-Jul-15, 6:11 pm)
பார்வை : 122

மேலே