நந்து

நம்ம பொண்ணுக்கு இந்து -ன்னு பேரு வைக்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள பக்கத்தூட்டுக்காரங்க அவுங்க பொண்ணுக்கு அந்தப் பேர வச்சுட்டாங்க.

பரவால்ல வேறு நல்ல பேரா இல்ல. இந்து-ன்ன வடமொழிலே "ஒளிரும் துளி"ன்னு அர்த்தம்.

சிந்து -ன்னு பேரு வைக்கலாம்னு இருந்தேம். எதிர் வீட்டுக்காரங்க முந்திட்டாஙக.

பரவால்ல இல்லத்தரசியாரே. சிந்து-ன்னா வடமொழிலே "ஆறு, கடல்"ன்னு அர்த்தம்.

சரி நீங்க தான் ஒரு நல்ல பேரச் சொல்லுங்க.

நந்து-ன்னு வச்சிருவோம்.

என்ன வெளையாடறீங்களா. பொண்ணுக்குப் போயி யாராவது நந்து -ன்னு பேரு வைப்பாங்களா?

நாம நம்ம பொண்ணுக்கு நந்து -ன்னே பேரு வைக்கலாம். வெள்ளச்சி (ஸ்வேதா)ன்னெல்லாம் பொண்ணுங்களுக்குப் பேரு வைக்கறாங்க. நம்ம பொண்ணு நந்து (சங்கு)ன்னு பேரு வச்சா என்ன தப்பு?



--------
நந்து என்பது தமிழ்ச் சொல். ஆதாரம்: வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி

எழுதியவர் : மலர் (8-Aug-15, 11:34 pm)
Tanglish : nanthu
பார்வை : 159

மேலே