என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 18​

​எனது வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்த பல நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து , எனக்குள் நினைவலைகள் கரை புரண்டு ஓடுகிறது . ​சில கண்முன்னே வந்து நின்று மறையவும் மறுக்கிறது ....சில உணர்வோடு கலந்து மேலும் கிளறிக் கொண்டிருக்கின்றன . உண்மையில் நடந்து முடிந்தவற்றை , எண்ணத்தில் இருந்து எழுத்தாய் மாற்றிடும்போது , உணர்வலைகள் உள்ளத்தில் சிலவேளைகளில் உச்சத்தைத் தொடுகிறது. இது பொதுவாக பலருக்கும் நேர்ந்திடும் இயற்கையான ஒன்றுதான் என்பதை நான் மறுக்கவில்லை. மாற்றுக் கருத்தும் இருக்காது என்றே நம்புகிறேன் .

நான் எனது குடும்பத் தலைவர் மட்டுமின்றி , பல குடும்பங்களுக்கும் , அவரால் ஆதரவு பெற்ற , உதவிகள் பெற்று உயர்ந்திட்ட , உள்ளத்தால் பூரித்த நெஞ்சங்கள் , காலத்தில் செய்திட்ட உதவியை மறவாமல் வாழும் , வாழ்ந்திட்ட உள்ளங்கள் ....இப்படி பல விதங்களில் வாழ்க்கையில் பலருக்கும் பயன்பட்ட ஒரு உன்னத , நேர்மையான , நீதிநெறி தவறாத , சுயநலமின்றி வாழ்ந்தவர்தான் எனது தாத்தா என்பதை பெருமையோடும் , மகிழ்ச்சியோடும் கூறிகொள்கிறேன். இதனை அவரை அறிந்தவர்கள் , உணர்ந்தவர்கள் நிச்சயம் அறிவர் . இதில் நான் ஏதும் மிகைப்படுத்தி சொல்லிடவும் இல்லை. இன்னும் சொல்வதானால் , அவரை முழுதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் உண்டு என்றால் அது அவரின் குடும்பம்தான் ...இதை ஊரறிந்த உண்மை. இந்த வார்த்தைகளை பல சமூக பெருமக்கள் மேடையிலும் , நேரிலும் கூறியதை , இன்றுவரை கூறுவதை நான் நன்கு அறிவேன் .

​இதை நான் இங்கே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதற்கு காரணம் , அவரை அறியாத பலரும் , எனக்கும் அறிமுகம் இல்லாத பலரும் நம் தளத்தில் இருப்பதால் , அவரைப் பற்றி உணர்ந்திடவே அன்றி வேறில்லை. ​அவர் அறியாத சமுதாய பெரியோர்கள் இல்லை...அரசியல்கட்சி தலைவர்கள் இல்லை ..( அவர் வாழ்ந்த காலத்தில் ) , பல துறைகளிலும் சிறந்து விளங்கிய பெரிய விற்பன்னர்கள் இல்லை ... ஆனாலும் அவர் எந்த காலத்திலும் தனக்காகவும் , தன குடும்ப உறுப்பினர்களுக்காகவும் பரிந்துரைக்கவும் இல்லை ....உதவிகள் கேட்டதும் இல்லை. இதை பேராசிரியர் திரு அன்பழகன் , நாவலர் திரு நெடுஞ்செழியன் , கலைஞர் திரு மு கருணாநிதி போன்ற பிரபலாமனவர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள் ...இன்றும் நினைவு கூர்வார்கள் .

அவருடைய 81 வது பிறந்தநாள் விழாவே அதற்கு அத்தாட்சி. உயர்நீதிமன்ற , உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் இதையே பேசினார்கள் . வந்திருந்த கூட்டத்தினரின் ஆரவாரம் இன்னும் என் காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது .
அந்த விழாவின் சில புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன் ...உங்கள் பார்வைக்கு.

படங்களின் விவரங்கள் :
************************************
1) நாவலர் திரு V R நெடுஞ்செழியன் , முன்னாள் தமிழக நிதி அமைச்சர் , தாத்தாவை
வாழ்த்திடும் காட்சி .

2) தாத்தாவின் 81 வது பிறந்தநாள் விழாவில் , முன்னாள் முதல்வர் பெரியவர்
திரு M பக்தவத்சலம் அவர்களுடன் மேடையில் .

3) அதே விழாவிற்கு வருகை தந்து, தலைமை தாங்கிய கலைஞர் அவர்கள் தாத்தாவை
மாலையிட்டு வாழ்த்தியபோது .

4) அதே விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு T ராமபிராசத ராவ் அவர்கள் வாழ்த்திய காட்சி .

5) ஒரு பாராட்டு விழாவில் தாத்தாவுடன் பிரபல பாடகர் ,மதுரை S சோமசுந்தரம் அவர்களும்,
முன்னாள் நீதிபதி திரு N கிருஷ்ணசாமி ரெட்டி அவர்களுடனும் .

6) பேராசிரியர் திரு க அன்பழகன் அவர்கள் , பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய காட்சி .

7) திரைப்பட தயாரிப்பாளரும் , முன்னாள் மேலவை உறுப்பினருமான
திரு இராம அரங்கண்ணல் அவர்கள் வாழ்த்திய காட்சி .

8) அவரின் 81 வது பிறந்தநாள் விழாவில் தாத்தாவை வாழ்த்தி பெரியவர் திரு M பக்தவத்சலம்
அவர்கள் பேசிடும் காட்சி.

9) எங்கள் இல்ல விழாவிற்கு வருகை தந்த அன்றைய அமைச்சர்கள் திரு S D சோமசுந்தரம் ,
திரு K A கிருஷ்ணசாமி அவர்களுடன் உரையாடும் காட்சி.
பின்னால் அமர்ந்திருப்பவர் திரைப்பட இயக்குனர் திரு A C திருலோகச்சந்தர் அவர்கள்.

10 ) அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு P R கோகுலகிருஷ்ணன்
அவர்கள் வாழ்த்திய காட்சி .

11) ஒரு விழாவில் உச்சநீதி மன்ற நீதிபதி திரு S நடராஜன் மற்றும்
நாவலர் திரு V R நெடுஞ்செழியன் அவர்களுடன் மேடையில் .

12) எங்கள் இல்ல விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் திரு s J சாதிக் பாட்சா
அவர்களுடன் உரையாடும் காட்சி .

13) உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு P வேணுகோபால், மற்றும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் திரு A கிருஷ்ணசாமி அவர்களுடன் அமர்ந்துள்ள காட்சி .


இன்னும் பல உள்ளன ...ஆனால் சிலவற்றை மட்டுமே இங்கே பகிர்ந்துள்ளேன் உங்களுடன் .

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் , மகிழ்ச்சியும் துயரமும் , நல்லதும் கெட்டதும் மேரி மாறித்தானே வரும் . இயற்கைதான் .

அப்படித்தான் அன்னாரின் மறைவும் எங்கள் குடுமபத்தில் தாங்கொன்னாத் துயர்மிகு சம்பவம் . பேரிழப்பு .

அதைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன் .....

மீண்டும் சந்திக்கிறேன் ...

பழனி குமார்
19.08.2015

எழுதியவர் : பழனி குமார் (19-Aug-15, 10:44 pm)
பார்வை : 340

சிறந்த கட்டுரைகள்

மேலே