கோணி இங்க வாம்மா

கோணி இங்க வாம்மா. இங்க யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாரு.?

யாருடா தம்பி கோணிங்கறது?

எம் பொண்ணு கண்ணம்மா தான் அக்கா. அவ ஒரு மட்டை விளையாட்டுப் (கிரிக்கெட்) பைத்தியம். அவளோட பள்ளிக்கூடத்து மட்டை விளையாட்டுக் குழுவுக்கு அவதான் தலைவி. இப்ப தேசிய அளவில வெளையாடப் போறா. கண்ணம்மான்னு பேரு இருந்தா நல்லா இருக்காதாம். அதோட அவ தோணியோட ரசிகையாம். வருங்காலத்திலே தோணி மாதிரி பெரிய மட்டை (கிரிக்கெட்) விளையாட்டு வீராங்கனையா வரணுமாம். அதனால வம்பு பண்ணி கண்ணம்மாங்க்கற அருமையான பேர கோணீஸ்ரீ -ன்னு மாத்திட்டா. அந்தப் பெயர் மாற்றம் அரசிதழ்லே பதிவாகிருச்சு.

இந்தக் காலத்துப் பிள்ளைக எல்லாம் சினிமா பாத்துக் கெட்டுப்போகுதுடா தம்பி.

அதுக்கு நாம என்னக்கா செய்யறது. கலிகாலம் அப்படித்தான் இருக்கும் .

எழுதியவர் : மலர் (24-Aug-15, 9:48 am)
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே