வெறுமை

நதி இழந்த
ஓடம் போல.....
ரதி அவளின்றி
யடமாகிப்
போனேன்.....

ஜீவன்
இங்கு
ஜீவனை
எடுத்துப்
போனதோ....?

நெஞ்சம்
துண்டானது.....
இது
உன்னாலே
உண்டானது.....
என்
தேகம்
இங்கு
சந்தோசம்
காண்பது
சந்தேகமானது.....

உயிரும்
உயிரும்
பிரியும்
தருணம்.....
நமக்குள்
ஆயிரம்
ரணம்......

காலம்
சொன்ன
பொய்கள்......
பொய்களே
அல்ல......
நிகழ்காலம்
மெய்ப்பித்துப்
போனதே......

காதல்
என்றும்
மேலானது......
அதை
எட்டுவது
என்பது அவ்வளவு
சுலபமில்லை.......

பகட்டுக்கு
காதல்
செய்து
இக்கட்டுக்குள்
மாட்டிக்கொண்ட
நல்ல
மனங்கள்
நம்மில் ஏராளம்......

வலிகளை
வாங்கிக் கொண்டு
விழிகளில்
நீர்
வார்க்கும்
இந்த உள்ளங்கள்
உறங்கும்
கல்லறைகள்
என்றோ
ஒருநாள்.....
குமுறத்தான்
போகிறது......

வேதனைகளை
மட்டும்
வாங்கி
அனுபவிக்கும்
வாடிக்கயாளனாக
என் சக
தோழனும்.....வாழும்
இப் பூமியில்
தென்றலும் தீ தான்.......

காதலை
வென்றவர்க்கு
வேறு உலகம்.....
அதை
இழந்த மறந்தவர்க்கு
இவ்வுலகத்திலும்
இல்லையே
நிம்மதி......

கூடுகட்டும்
நினைப்பில்
வீடு விட்டு
வந்து......
கட்டிய கூடழிந்து
வாட்டியது
வேதனையே......

ஏதேதோ
சொல்ல
எங்கேயோ இவன்
தொலைகிறேன்
தேடி
வந்து நீயும்
தேகம் வாடிப்
போகாதே......

எழுதியவர் : thampu (31-Aug-15, 3:21 am)
Tanglish : verumai
பார்வை : 135

மேலே