வீட்டோட மாப்பிள்ளை

தரகர் = உங்கப் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை கேட்டிருந்தீங்கள் இல்லையா ..

வீட்டுக்காரர்= ஆமாம் ..யாராவது கிடைச்சாங்களா ?

தரகர் = உங்க தகுதிக்குத் தகுந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை இருக்காரு ..

வீட்டுக்காரர் = அவராவது என்ன மாதிரி வாடகை வீட்டிலே இல்லாம சொந்தமா வீடு வச்சிருக்கவரா இருந்தா சரி.

தரகர் = நீங்க என்ன சொல்லுறீங்க..?

வீட்டுக்காரர்= நான்தான் வாடகை வீட்டிலே காலத்தை கழிச்சுட்டேன். என் பொண்ணாவது சொந்த வீடு வச்சிருக்கவனை கட்டணும் என்றுதான் வீட்டோட மாப்பிள்ளையா பார்க்கச் சொன்னேன் அதாவது சொந்த வீட்டோட மாப்பிள்ளை..

தரகர்.=.....!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Sep-15, 2:31 am)
பார்வை : 155

மேலே