மது மோகன்

யாருடா அங்க குடி போதையிலே கீழெ விழுந்து கெடக்கிறது?

அட அது நம்ம மது மோகன்- தான்டா.

என்ன பேருக்குத் தகுந்த மாதிரி குடி வெறி பிடிச்சவனா இருக்கறானெ.

அவன் நல்ல குடும்பத்ல பொறந்வன்டா. கெட்ட நண்பர்களின் பழக்கத்தாலே குடிச்சுப் பழகி, இப்ப மொடாக் குடிகாரனாகிட்டான்டா.

அவனோட அம்மா அப்பா தொலைநோக்குப் பார்வையோட அவனுக்கு மது மோகன்-னு பேரு வச்சிருப்பாங்களா?

டேய் மது மோகனோட அப்பா பன்மொழிப் புலவர்டா. மது மோகன் என்ற சொற்களும் வட மொழிச் சொற்கள். மது வடமொழியிலும் மதுவைக் குறிப்பதுடன் இனிப்பான, தேன் என்ற அர்த்தங்களையும் தரும் சொல்.வேத காலத்தில் பயன்படுத்திய சோமா, சூரா போன்ற பானங்களையும் மதுன்னு தான் சொன்னாங்க. உணர்ச்சி வசப்பட்டு போதை வந்தவர் நடித்தல் என்ற அர்த்தமும் இருக்கு. மோஹன்-னா கவர்ச்சியான, வசீகரமான, மயக்குகிற -ன்னு பல அர்த்தங்கள் இருக்கு.

என்ன செய்யறது நல்ல குடும்பத்தில பொறந்து கெட்ட நண்பர்கள் சேர்க்கையாலே குடிகாரன் ஆகிட்டானே நம்ம மது மோகன்.

-----/----
சிரிக்க அல்ல. சிந்திக்க.
நன்றி: விக்கிப்பீடியா

எழுதியவர் : மலர் (5-Sep-15, 7:37 pm)
Tanglish : mathu mogan
பார்வை : 139

மேலே