நன்றி

அதிகாலை நேரம்...சூரியன் எப்போதும் போல் உதித்தது...ராணி கண் விழித்தாள்.. கண் முன் காபி .. எப்போதும் போல் அம்மா இன்றும் வைத்து விட்டாள்.

" அம்மா.. காபி சூடா இல்லை..." என்றாள் கோபத்துடன் , 19 வயது கல்லூரி பெண்..
ராணி எப்பொதும் சமையல் பக்கம் போகாதவள்.அம்மாவை திட்டாமல் ஒரு நாள் கூட அவளுக்கு வேலை ஓடாது. அப்பா வேலைக்கு கிளம்பிவிட்டார்..ராணி கிளம்பினாள் அலுப்பாக..

கல்லூரி வந்து சேர்ந்துவிட்டாள் ஒரு வழியாக . அன்று புதிதாக ஒரு பெண் இவள் வகுபிற்கு வந்தாள்.. தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டாள்.

" என் பெயர் கயல் . நான் முதலில் வேறு கல்லூரியில் படித்தேன்.இப்போது என் அப்பா வேலை இங்கு மாற்றி விட்டனர்.உங்களுக்கு நல்ல தோழி ஆகா இருப்பேன் என்று நினைக்கிறேன்..."

சிறிது காலம் கழிந்து கயல் ராணி பேச தொடங்கினர்.கயலுக்கு அம்மா இல்லை , அவள் தான் தினமும் வேலை செய்து அப்பாவை பார்த்து கொள்கிறாள் என்று ராணிக்கு தெரிய வந்தது.எதோ யோசித்தால் உடனே ..

அடுத்த நாள் காலை. ராணி கண் விழித்தாள்.காபி இருந்தது . ஆறி தான் இருந்தது. அவள் ஒன்றும் சொல்ல வில்லை. சந்தோஷமாக கிளம்பினாள் .

அம்மாவிற்கு ஆச்சிரியம். தன் கால் அணியை போடும் போது அம்மா வெளியில் வந்தாள்.
அம்மாவிடம் எப்போதும் திட்டும் அவள் இன்று அம்மாவின் நெற்றியில் அன்பாக ஒரு முத்தம் இட்டு திரும்பி கடவுளிடம் மனதில் நன்றி சொல்லி நடக்க ஆரம்பித்தாள்....

எழுதியவர் : santhanalakshmi (7-Sep-15, 9:43 pm)
Tanglish : nandri
பார்வை : 432

மேலே