மொத்தம் நாலு மல்லா உங்க வீட்டிலெ

மொத்தம் நாலு மல்லா உங்க வீட்டிலெ
====================================
ஏய்யா உன் மனைவிக்கு மொதல் பிரசவத்திலும்
இரட்டையர்களா ஆண் குழந்தைகள். இரண்டாம் பிரசவத்திலும்
இரண்டு ஆண் குழந்தைகள் பொறந்திருக்காங்க.
------
ஆமய்யா. ஒரு பக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும் அதுங்கள
வளக்கறது பெரும்பாடா இருக்குதய்யா.
------
சரி கஷ்டம் என்னன்னு சொல்லுய்யா.
-----
மூத்த இரட்டையர்கள சமாளிச்சு வளத்தோம். இப்ப
அவுங்களுக்கு வயசு நாலு. இரண்டாவது இரட்டையர்களுக்கு
இன்னும் ஒரு வயசுகூட முடியல. எங்களால ஒன்னும்
சமாளிக்க முடியலய்யா.
-----
அட போய்யா. இரட்டைக் கொழந்தைங்க பொறந்தா யாருக்கா
இருந்தாலும் அவுங்க வளந்து ஆளாக வரைக்கும் இந்தக்
கஷ்டம் இருக்கத்தாய்யா செய்யும். சரி, அவுங்களுக்கு என்ன
பேருங்கள வச்சிருக்க?
------
மூத்த இரட்டையர்கள் நிர்மல், கர்மல். இரண்டாவது
இரட்டையர்கள் பர்மல், சர்மல்.
------
ஓ...அப்பிடியா? ஆக மொத்தம் உங்க வீட்ல நாலு மல்...கள்.
என்னய்யா எல்லாம் இந்திப் பேரா இருக்கு?
--------
ஏய்யா, தமிழ் ஆசிரியர்களே அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப்
பேர வைக்கிறதில்ல. என் தாய் மொழி தமிழா இருந்தாலும் நா
இந்தி வாத்தியார்தானே. எம் பிள்ளைங்களுக்கு இந்திப் பேர்கள
வச்சா என்னய்யா தப்பு?
====================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
===========================================
நிர்மல் = தெளிவான --- கர்மல் = தாமரை
பர்மல் = வட இந்தியாவில் சில மாநிலங்களில் கிடைக்கும் ஒரு
வகை அரிசியன் பெயர் (பொன்னி அரிசி என்பதைப் போல).
சர்மல் = செயலூக்கம் உள்ள.

எழுதியவர் : மலர் (9-Sep-15, 3:40 pm)
பார்வை : 121

மேலே